சர்க்கரைக்கு ‘நோ’ வெல்லத்துக்கு ‘எஸ்’? ஜாக்கிரதை!! உங்களுக்கு தான் இந்த பதிவு
Diabetic Patients: வெல்லத்தில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களின் அளவு காரணமாக, இது வெள்ளை சர்க்கரையை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
Diabetes: பல வகையான இந்திய உணவுகளில் வெல்லம் சேர்க்கப்படுகின்றது. இது கரும்பு சாறு அல்லது பனை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கையான இனிப்பு வகை ஆகும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் போலல்லாமல், இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. ஏனெனில் இது குறைந்தபட்ச பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றது.
இருப்பினும், வெல்லத்தில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களின் அளவு காரணமாக, இது வெள்ளை சர்க்கரையை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பல நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த பழக்கமும் சரியானதல்ல. ஏனெனில் இதுவும் அவர்களது ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை ஏன் தவிர்க்க வேண்டும்? இதை பற்றி இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
Diabetic Patients: நீரிழிவு நோயாளிகள் வெல்லம் உட்கொள்வதால் வரும் ஆபத்து
உயர் கிளைசெமிக் குறியீடு
வெல்லத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் (High Glycemic Index) அதிகமாக இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. இதன் பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இதுவும் விரைவாக அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் நிலையான குளுக்கோஸ் அளவைப் பராமரிப்பது முக்கியம். மேலும் வெல்லம் போன்ற உயர் GI உணவுப் பொருட்களை உட்கொள்வது திடீர் சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதனால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.
சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும்
வெல்லம் வெள்ளை சர்க்கரையை விட குறைவாக பதப்படுத்தப்பட்டாலும், இரத்த சர்க்கரையில் அவற்றின் விளைவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உணவில் வெல்லத்தைச் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்கும் முயற்சிகளைத் தடுக்கலாம், இது நீரிழிவு நோயாளிகளுக்கு முதன்மையான இலக்காகும்.
கலோரிகள்
வெல்லத்தில் அதிக கலோரி உள்ளது. இதை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக எடை அல்லது உடல் பருமன் நீரிழிவு நோயை இன்னும் மோசமாக்கும். ஏனெனில், அதிக எடை இன்சுலின் உணர்திறன் குறைவதோடு தொடர்புடையது.
சுக்ரோஸ் அதிகம் உள்ளது
வெல்லத்தில் முக்கியமாக சுக்ரோஸ் உள்ளது. இது ஒரு வகை சர்க்கரையாகும், இது இரத்த ஓட்டத்தில் விரைவாக குளுக்கோஸாக உடைகிறது. இது சுகர் நோயாளிகளுக்கு நல்லதல்ல. இது சர்க்கரை அளவை அதிகரித்து உங்களை பெரும் சிக்கலில் ஆழ்த்தலாம்.
இன்சுலின் ரெசிஸ்டன்ஸில் பாதிப்பு
வெல்லத்தை அவ்வப்போது உட்கொள்வது காலப்போக்கில் உயர் இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும். இது இன்சுலின் ரெசிஸ்டன்ஸை மோசமாக்கும். இது செல்கள் இன்சுலினுக்கு குறைவான உணர்திறன் கொண்ட ஒரு நிலையாகும். இது ஏற்கனவே இன்சுலின் செயல்பாடு குறைபாட்டுடன் போராடும் நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக தீங்கு விளைவிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொழுப்புக்கு குட்பை சொல்ல இந்த எளிய உணவுகள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ