Weight Loss Vegetables: இன்றைய நவீன உலகில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனை உடல் பருமன். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. உடல் பருமனை நோய் என கூற முடியாது என்றாலும், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு காரணமாகி வடுவதால், அதனை கட்டுக்குள் வைப்பது. அதிலும், தொப்பை கொழுப்பு ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் கெடுத்து விடும்.
உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில எளிய, இயற்கையான வழியில், நமது உணவு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அந்த வகையில், உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பை எரிக்க, உணவில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டு வர பெரிதும் உதவக்கூடிய கலோரிகள் மிக குறைவாக சில காய்கறிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
காய்கறிகள் அனைத்துமே ஆரோக்கிய நலன்களை அள்ளிக் கொடுப்பவை. அதிலும் சில காய்கறிகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.
கீரை
கீரையில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது எடை இழப்புக்கு உதவுகிறது. கீரையை சாலட், சூப் அல்லது காய்கறியாக சாப்பிடுங்கள். இது நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப வைத்திருக்கிறது, இதன் காரணமாக உங்களுக்கு மீண்டும் மீண்டும் பசி ஏற்படாது.
வெள்ளரி
அதிக நீர் சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட மிக சிறந்த காய்கறிகளில் ஒன்றான வெள்ளரி சிறந்த வெயிட் லாஸ் உணவு. இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதோடு. பசியும் கட்டுப்படுத்தப்படும். வெள்ளரிக்காயை பச்சடியாக, சாலட் ஆக சாப்பிடலாம். எலுமிச்சை உப்பு கலந்த வெள்ளரி சாலட் சிற்றுண்டிக்கு ஏற்றதாக இருக்கும்.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இவை கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. குறைந்த கலோரி கொண்ட இந்த காய்கறி உடல் கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை வேகவைத்தோ அல்லது லேசாக வேகவைத்தோ சாப்பிடலாம். அதிக அளவில் வேக வைத்தால் சத்துக்களை இழந்து விடுவோம் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரட்
கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. எனவே, இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எடை இழப்புக்கும் உதவுகிறது. இதை சாலட் அல்லது சூப் வடிவில் சாப்பிடலாம். இதனை பச்சையாக உண்ணலாம் என்றாலும், லேசாக வேக வைப்பதால், பீட்டா கரோட்டின் சத்தை முழுமையாக பெறலாம்.
சுரைக்காய்
அதிக நீர் சத்து மற்றும் குறைந்த கலோரிகளுக்கு பெயர் பெற்ற சுரைக்காய், உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. சுரைக்காய் ஜூஸ், சுரைக்காய் தோசை, சுரைக்காய் பொறியல் என விதம் விதமாக, செய்து சாப்பிடலாம்
குடை மிளகாய்
குடைமிளகாயில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை விரைவாக எரிக்க உதவும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சாலட் அல்லது பொறியலாக இதனை சாப்பிடலாம். சாம்பாரில் சேர்க்கலாம். ப்ரோக்கலியை போலவே, இதனையும் அளவிற்கு அதிகமாக வேக வைக்கக் கூடாது.
தக்காளி
தக்காளியில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன, மேலும் இது உடலை நச்சுத்தன்மையாக்குகிறது. இது தொப்பையை விரைவாக குறைக்க உதவுகிறது. சாலட், சூப் அல்லது ஜூஸாக சாப்பிடலாம்.
வெண்டைக்காய்
வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, அதிக கொழுப்பை எரித்து, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. எனவே, உடல் எடை குறைக்க உதவுகிறது. எனினும், இதனை குறைந்த எண்ணெயில் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
1. காய்கறிகளை அதிக எண்ணெயில் வறுப்பதைத் தவிர்த்து, குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
2. காய்கறிகளை அதிகமாக சமைக்க வேண்டாம். அதனால் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் அழியாமல் இருக்கும்.
3. உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
4. உடல் எடையை குறைப்பதற்கு உணவு முறை மிக அவசியம் என்றாலும், இதனுடன், உடற்பயிற்சி, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவதும் முக்கியம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.