ஃப்ரிட்ஜ் வாட்டருக்கும் மண்பானை தண்ணீருக்கும் போட்டி: ஜெயிப்பது யார்
நமது ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புதுடெல்லி: நமது ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால், கோடைகாலத்தில் குளிர்நீர் குடிக்க விரும்புவோம். எனவெ குளிர்சாதன பெட்டியில் வைத்து குளுமையான நீரை குடிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
வெயிலுக்கு தொண்டைக்கு இதமாக இருப்பது போல தோன்றினாலும், குளிர் நீரால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. ஃபிரிட்ஜ் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் சில பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த விஷயங்களை தெரிந்துக் கொண்டால், குளிர் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ஆரோக்கியம் என்பதே ஒரு செல்வம் தானே?
மேலும் படிக்க | வெயில் காலத்தில் ஃபிரிட்ஜ் தண்ணீர், அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்
வெப்பம் பேரழிவை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் மழைக்காக காத்திருக்கும் நிலையில், இந்த வெப்பத்தை சமாளிக்க மக்கள் ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டி தண்ணீரை நாடுகின்றனர்.
குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். குளிர்சாதனப்பெட்டிக்கு வெளியே வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலத்தில் சூடாக இருந்தாலும், உடலுக்கு தீமை செய்யாது..
பானையில் வைக்கப்படும் தண்ணீர் மிகவும் குளிராகவோ, சூடாகவோ இருக்காது. இந்த நீர் தொண்டைக்கு மிகவும் நல்லது. சளி, இருமல் இருந்தாலும் பானை தண்ணீர் குடிப்பதால் எந்த பிரச்சனையும் வராது.
மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள்
மனித உடல் அமில தன்மை கொண்டது, மண் கார தன்மை கொண்டது. பானை நீர் நமது உடலின் அமிலத் தன்மையுடன் வினைபுரிந்து சரியான pH சமநிலையை உருவாக்க உதவுகிறது. இதனால் தான் பானை தண்ணீர் குடிப்பதால் அமிலத்தன்மை மற்றும் வயிற்று பிரச்சனைகள் ஏற்படாது.
நீரிழப்பு அல்லது வெப்பத் தாக்கம் ஏற்படுவது கோடை காலத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகும். இதற்கு ஒரே தீர்வு மண் பானையில் வைக்கப்படும் தண்ணீர் மட்டுமே. மண்பானைத் தண்ணீரில் சத்துக்கள் உள்ளன. அவை உடலில் குளுக்கோஸின் அளவை பராமரிக்க உதவுகின்றன.
நீரிழப்பு மற்றும் கோடையில் ஏற்படும் உடல் சூடு போன்ற பிரச்சனைகளையும் மண்பானைத் தண்ணீர் தடுக்கிறது.
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும்
குளிர்சாதனப் பெட்டி நீர் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. இதை குடிப்பதால் இரத்த நாளங்கள் சுருங்கும், இது செரிமான செயல்முறையைத் தடுக்கிறது. எனவே, குளிர்நீரை பருகுவதால், உணவுடன் தொடர்புடைய ஊட்டச்சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படுவதில்லை.
நமது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். குளிர்ச்சியான ஒன்றைக் குடிக்கும்போது, அந்தப் பொருளின் வெப்பநிலையுடன் சமநிலைப்படுத்த உடல் அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டும்.
அதேசமயம், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், செரிமானம் செய்வதற்கும் இந்த ஆற்றல் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஃபிரிட்ஜில் வைக்கும் குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR