Health Tips for Men: தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், 30 வயதிற்குள் ஆண்களுக்கு பல நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. இந்த ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள, உணவு மற்றும் உடற்பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலும்புகள் பலவீனமாகிவிடும்


பொதுவாக ஆண்கள், 30 வயதை நெருங்கும்போது, எலும்புகள் (Bones) பலவீனமடைய ஆரம்பிக்கும். எலும்புகள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க, கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இது உடல் எடையை குறைக்கவும் உதவும். தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பது மிகவும் அவசியமாகும்.


இதய நோய்


30 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. உணவுப் பழக்கத்தால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, அது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதய நோய்கள் வராமல் இருக்க உணவுக் கட்டுப்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.


உடல் பருமன்


நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி (Physical Exercise) செய்யாவிட்டால், வளர்சிதை மாற்றம் மெதுவாகி, அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துங்கள்.


ALSO READ:Weight Loss Tips: நிம்மதியா சாப்பிடுங்க... நிஜமா எடை ஏராது 


வழுக்கை பிரச்சனை


30 வயதிற்குப் பிறகு, ஆண்களுக்கு வழுக்கை பிரச்சனையும் அதிகமாக வரும். இதில் ஆண்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆண்கள் அதிகமாக புரதம், கால்சியம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்து, மன அழுத்தத்தைக் குறைத்து, நேரத்திற்கு தூங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.


புரோஸ்டேட் புற்றுநோய்க்கான ஆபத்து


30 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் (Cancer) ஆபத்து அதிகரிக்கிறது. இதனால், அடிக்கடி கழிப்பறைக்கு செல்வது, இரவில் சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகளைக் கவனித்து உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ:Health and Devotion: அத்தி மரத்தின் அருமையும், பெருமையும் தெரியுமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR