Cancer detection: மரபணு மாற்றப்பட்ட புழுவைப் பயன்படுத்தி புற்றுநோயைக் கண்டறியலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரைக் கொண்டு அவர்களுக்கு நோய் இருப்பதை உறுதி செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட புழுக்களை இதற்கு பயன்படுத்தலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2021, 04:51 PM IST
  • புற்றுநோயை கண்டறிய புதிய முறை
  • மரபணு மாற்றப்பட்ட புழு புற்றுநோயைக் கண்டறிய உதவும்
  • ஜப்பான் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
Cancer detection: மரபணு மாற்றப்பட்ட புழுவைப் பயன்படுத்தி புற்றுநோயைக் கண்டறியலாம் title=

ஜப்பானிய விஞ்ஞானிகள் புற்றுநோயைக் கண்டறிய மரபணு மாற்றப்பட்ட புழுவைப் பயன்படுத்துகின்றனர். மரபணு மாற்றப்பட்ட புழுவிற்கு, வாசனையை நுகரும் திறன் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரைக் கொண்டு அவர்களுக்கு நோய் இருப்பதை உறுதி செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட புழுக்களை இதற்கு பயன்படுத்தலாம், என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய பயோடெக் நிறுவனம் (Japanese biotech firm) கூறியுள்ளது.

கணைய புற்றுநோயை (pancreatic cancer) ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் புதிய முறையை ஜப்பானிய பயோடெக் நிறுவனம் வகுத்துள்ளது. இந்த நுட்பம் மரபணு மாற்றப்பட்ட ஒரு வகை புழுவைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. “C. elegans”  என்ற புழுவை  ஹிரோட்சு பயோ சயின்ஸ் என்ற ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கேன்சர்

புற்றுநோயாளிகளின் (Cancer Patients) உடலில் உள்ள திரவங்கள் ஆரோக்கியமானவர்களின் உடலில் உள்ள திரவத்தின் வாசனையிலிருந்து வேறுபட்டது ஆகும். இதன் அடிப்படையில், மூச்சு அல்லது சிறுநீர் மாதிரிகளில் நோயைக் கண்டறிய பயிற்சி பெற்ற நாய்களுடன் பரிசோதனைகள் நடந்துள்ளன. இருப்பினும், இந்த முறையில் நோயைக் கண்டுபிடிக்க அதிக காலம் எடுக்கும்.

தற்போது ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ள மரபணு மாற்றப்பட்ட புழு, ஒரு மில்லிமீட்டர் நீளம் கொண்டது, அதிக நுகர்வுத் திறனைக் கொண்டுள்ளது. இந்தப் புழுவை பயன்படுத்துவதன் மூலம் மூலம் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வெங்காயத்தாளின் நன்மைகள்

"புதிய சோதனை கணைய புற்றுநோயைக் கண்டறிவதற்காக அல்ல, ஆனால் மருத்துவமனை வருகையின்றி சிறுநீர் மாதிரிகளை வீட்டிலேயே சேகரிக்க முடியும் என்பதால் வழக்கமான பரிசோதனையை அதிகரிக்க உதவும்" என்று ஹிரோட்சு செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும் புழுக்கள் மூலம் எச்சரிக்கை கிடைத்தால், நோயாளி உடனே அடுத்தக்கட்ட பரிசோதனைக்காக மருத்துவரிடம் அனுப்பப்படுவார், என்றார். "இது ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றம்" என்றும் ஜப்பானில் புற்றுநோயைக் கண்டறிதல் விகிதங்களை அதிகரிக்க இது உதவும் என்றும் தலைமை நிர்வாக அதிகாரி Takaaki Hirotsu கூறுகிறார். 

நிறுவனத்தால் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், கணைய புற்றுநோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து 22 சிறுநீர் மாதிரிகளையும் புழுக்கள் சரியாக அடையாளம் கண்டுள்ளன. இதில் நோயின் ஆரம்ப கட்டங்களில் உள்ளவர்களி மாதிரிகளும் அடங்கும் என்பதால் இந்த முறை, உலக அளவில் வரவேற்பைப் பெறும் என்று நம்பப்படுகிறது.  

READ ALSO | கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற கொசு பற்றி தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News