Breakfast Mistakes: காலை உணவின் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்
Common Breakfast Mistakes in Tamil: காலை உணவு என்பது நாளின் முதல் உணவாகும், எனவே இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காலை உணவின் போது என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
காலை உணவின் போது நாம் தெரிந்தே செய்யும் தவறுகள்: காலை உணவு என்பது நாளின் முதல் உணவாகும், எனவே இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உங்களின் நாள் நல்ல வகையில் தொடக்கம் வேண்டுமெனில், ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவை உண்ண வேண்டும். இதன் மூலம் தேவையான சக்தி உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் சிலர் காலை உணவின் போது தெரிந்தே சிறிய தவறுகளை செய்கிறார்கள், அதனால் அவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த தவறுகளால், சர்க்கரை நோய், பிபி போன்ற நோய்கள் உங்களைத் தங்கள் பிடியில் ஆட்கொள்கின்றன. எனவே காலை உணவின் போது என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
காலை உணவின் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்-
காலை உணவில் புரதம்
நம்மில் பெரும்பாலோர் தீங்கு விளைவிக்கும் சிலவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் நமது உடலுக்கு புரதம் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். அதனால்தான் காலை உணவில் புரதச் சத்து அதிகம் உள்ளவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை உணவில் புரதம் சேர்த்துக்கொள்வது தசைகளின் வளர்ச்சிக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க!
நார்ச்சத்து
சிலர் தங்களின் காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவை சேர்த்துக்கொள்வதில்லை. நார்ச்சத்து நிறைந்த உணவை காலையில் சாப்பிட்டு வந்தால் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து உட்கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் செரிமானமும் வலுவடைகிறது.
பேக் செய்யப்பட்ட ஜூஸ் குடிப்பது
நீங்களும் காலை உணவில் பேக்டு ஜூஸ் குடித்தால் அது தவறான உணவுமுறை, அப்படி செய்தால் உடல் எடை கூடும். இது நம் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது, எனவே பேக் செய்யப்பட்ட ஜூஸை காலை உணவில் உட்கொள்ளக்கூடாது.
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ