Health Tips For Weight Loss: ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தின் வழியே நீங்கள் இயல்பாகவே உடல் எடையை குறைக்கலாம். உங்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றின் உதவியுடன் உடல்எடை குறைப்பதே ஆரோக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், இரவு உணவுக்கு (Dinner) பிறகு ஆரோக்கியமற்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் உடல் எடை குறைப்பு பயணத்தில் உங்களுக்கு பெரிய பின்னடைவு ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது இரவு உணவு சாப்பிட்ட பின்னர் உடனே சோபாவில் படுப்பது; டிவி, மொபைல், லேப்டாப்பை பார்த்துக்கொண்டு அப்படியே அசையாமல் உட்கார்ந்திருப்பது ஆகியவை உங்களது உடல் எடை குறைப்பில் எவ்வித முன்னேற்றத்தையும் கொடுக்காது. இரவு நீண்ட நேரம் கழித்து நொறுக்குத் தீனிகளை கொறிப்பது, பசியற்ற அல்லது தேவையற்ற நேரத்தில் உணவுகளை உண்பதன் மூலம் இரவில் அதிக கலோரிகளை உட்கொள்வது இவையெல்லாம் செரிமானத்தை மோசமாக்கும்.


அந்த வகையில் நீங்கள் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் சில செயல்களை செய்வதன் மூலம் உடல் எடை குறைப்பில் நல்ல பலனை பெறலாம். ஆரோக்கியமற்ற செயல்களை செய்வதை விடுத்து இரவு உணவுக்கு பின்னர் இந்த ஐந்து செயல்களை நீங்கள் தினமும் தவறாமல் செய்தால் உடல் எடை குறைப்பில் (Weight Loss) நல்ல முன்னேற்றம் காணலாம்.


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவு அதிகமா இருக்கா? இந்த காய் சாப்பிட்டால் கட்டுக்குள் கொண்டு வரலாம்


மூலிகை டீ


இரவு உணவுக்கு பின்னர் உடல் எடை குறைப்புக்கும், செரிமானத்திற்கும் உதவும் வகையில் மூலிகை டீயை (Herbal Tea) அருந்துவது நன்மையை தரும். குறிப்பாக, காஃபின் இல்லாத இஞ்சி டீ, மிளகுக்கீரை டீ போன்றவற்றை அருந்தலாம். இவை செரிமானத்தை எளிதாக்கி, வயிறை இலகுவாக்கும். இரவில் காஃபின் நிறைந்த பானங்களை குடிப்பதை தவிருங்கள். அவற்றை தவிர்ப்பதன் மூலம் தூக்கம் சீராகும், தேவையற்ற வகையில் பசி எடுக்காது, வளர்சிதை மாற்றத்திற்கும் உதவும். இவை அனைத்தும் உடல் எடை குறைப்பை விரைவுப்படுத்தும்.


யோகாசனம்


இரவு சாப்பிட்ட பின்னர் உடல் எடையை குறைக்கும் பொருட்டு, யோகாசனம் (Yoga) செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இது உடலை நெகிழ்வுத்தன்மைக்கு கொண்டுவரும். தசைகள் வலுபெறும், மேலும் வளர்சிதை மாற்றமும் அதிகமாகும். யோகா செய்வதால் மன அமைதி ஏற்படும். செரிமானம் சீராகி, தேவையற்ற நேரத்தில் பசி எடுக்காது. கலோரிகளை கரைக்கும் சில யோகாசனங்களை தெரிந்துகொள்வதும் அவசியம்.


சிறு உடற்பயிற்சி


யோகாசனம் செய்வது ஒருபுறம் இருக்க, சிறு சிறு உடற்பயிற்சிகளை (Low Intensity Exercises) இரவு உணவுக்கு பின்னர் மேற்கொண்டால் நிச்சயம் உடல் எடை குறைப்பில் பெரிய தாக்கம் அற்படும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்த உதவும். குறிப்பாக செரிமானத்தை சீராக்கும், உப்புசம் போன்ற பிரச்னைகளை தடுக்கும். இதனால் உடலும் ரிலாக்ஸ் ஆகும்.


சிறிய நடைப்பயிற்சி


இரவு உணவுக்கு பின்னர் சுமார் 15-20 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி (Walking) மேற்கொள்வது உடல் எடை குறைப்பில் சிறப்பான முன்னேற்றத்தை குறைக்கும். கலோரிகளை குறைப்பது ஒருபுறம், செரிமானத்தை சீராக்கி, வளர்சிதை மாற்றத்தை வலுவாக்கும். மேலும், மன அமைதியை ஏற்படுத்தி, ரிலாக்ஸாக உணர வைத்து இரவில் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.


நல்ல தூக்கம்


இரவு சாப்பிட்ட உடன் தூங்காமல் சிறு சிறு செயல்களை செய்த பின்னர் நன்றாக தூங்க (Good Sleep) வேண்டும். தூக்கமே உடலில் இருக்கும் அசதிகளை விரட்டும். நன்றாக தூங்கினால் தசைகள் வலுவாகி தேவையற்ற பசி எடுக்காது. வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். உடல் எடை குறைப்புக்கு தினமும் இரவில் 7-8 மணிநேர தூக்கம் அவசியம் ஆகும்.


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)


மேலும் படிக்க | எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக்கும் சியா விதைகள்... சாப்பிடும் சரியான முறை இது தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ