திருநீற்றுப் பச்சிலை விதைகள் எனப்படும் சியா விதைகள், மிகச் சிறியதாக கருப்பு நிறத்தில் இருக்கும், இனிப்பு சுவை கொண்ட விதைகள். இதன் மூலம் நமக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் ஏராளம். அளவில் சிறியதாக இருந்தாலும், எண்ணற்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளதன் காரணமாக அவை "சூப்பர்ஃபுட்" என கூறப்படுகிறது. சியா விதைகளை ஊற வைக்கும் போது அதில் உள்ள நார்சத்து மிகவும் அதிகரிக்கிறது. அதோடு அதில் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். 100 கிராம் சியா விதைகளில் சுமார் 631 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அதே சமயம் 100 மில்லி பசுவின் பாலில் சுமார் 125 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அதாவது சியா விதைகள் பாலை விட சுமார் 5 மடங்கு கால்சியத்தை வழங்குகிறது.
நமது உடல் சரியாக செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களில் கால்சியமும் அவற்றில் ஒன்று. எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் சத்து அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
சியா விதைகளின் அதிசய நன்மைகள்
எலும்புகளை வலுவாக்கும் விதை
கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் நிறைந்த சியா விதைகள் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் நன்மை பயக்கும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இவை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
இதய ஆரோக்கியம்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது, இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இரத்த நாளங்கள் மற்றும் அவற்றின் சுவர்களை வலுப்படுத்தி மாரடைப்பை தடுக்கிறது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்
சியா விதைகளில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
எடை இழப்புக்கு சிறந்த உணவு
சியா விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
சியா விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது.
சரும ஆரோக்கியம்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்த சியா விதைகள் சருமத்தை பளபளப்பாகவும் வைத்துக் கொள்வதோடு, கூந்தலையும் வலுவாகவும், அடத்தியாகவும் பராமரிக்க உதவுகிறது.
சியா விதைகளை சாப்பிடும் முறை
சியா விதைகளை அப்படியே சாப்பிடாமல், தண்ணீர், பால் அல்லது தயிரில் ஊறவைத்து சாப்பிடுங்கள். ஊறவைப்பதன் மூலம், அவை ஜெல் போன்ற நிலைத்தன்மையைப் பெறுகின்றன. எனவே, ஜீரணிக்க எளிதானது. பின்வரும் வழிகளில் இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்:
1. ஸ்மூத்திக்களில் கலக்கலாம்
2. சாலட் அல்லது சூப்பில் சேர்க்கலாம்
3. தயிர் அல்லது ஓட்ஸுடன் கலந்து சாப்பிடலாம்.
4. பாலில் கலந்து அருந்தலாம்
சியா விதைகள் பக்கவிளவுகள்
சியா விதைகளை அலவோடு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. பொதுவாக, 1-2 டீஸ்பூன் (சுமார் 20 கிராம்) சியா விதைகள் உட்கொண்டால் போதும். இது சுமார் 120-130 மி.கி கால்சியத்தை வழங்குகிறது. இந்த அளவு கால்சியத்தின் தினசரி தேவையை பூர்த்தி செய்ய உதவும். சியா விதைகளை அதிக அளவில் உட்கொள்வது வயிற்றில் வாயு அல்லது உப்பிசத்தை ஏற்படுத்தும். அவற்றை எப்போதும் போதுமான அளவு தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள். உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.
சியா விதைகள் ஊட்டச்சத்தின் புதையல் மற்றும் கால்சியத்திற்கான சிறந்த மாற்றாகும். குறிப்பாக பால் உட்கொள்ள முடியாதவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்து, அதன் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கவும். இந்த சிறிய விதை உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.