)
Cholesterol Control Tips: மனிதர்களை அதிகமாக ஆட்கொள்ளும் வாழ்க்கை முறை நோய்களில் உயர் கொலஸ்ட்ராலும் முக்கியமான ஒன்று. அதிகப்படியான எண்ணெய் கொண்ட உனவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இதய நோய் அபாயமும் அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த, வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். இப்போதெல்லாம், மக்களின் உணவு முறை மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவுகளின் நேரடி தாக்கம் மக்களின் ஆரோக்கியத்தில் தெரிகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளால் மனிதர்களின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு வேகமாக அதிகரிக்கிறது.
கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படும் சில விஷயங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சில காய்கறிகளின் மூலம் கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைக்கலாம். அத்தகைய காய்களில் ஒன்று முள்ளங்கி. முள்ளங்கியில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை அதிக கொழுப்பைக் குறைக்க உதவும். இது தவிர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கும் இது நல்லது. முள்ளங்கி பல்வேறு வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ரால் உட்பட பல நோய்களைத் தடுக்க உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் முள்ளங்கி
முள்ளங்கியில் பொட்டாசியம் மற்றும் அந்தோசயனின் ஆகியவை உள்ளன. இவை இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீரின் அளவு நரம்புகளில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களை அகற்ற உதவுகிறது. இது தமனிகளை ஆரோக்கியமாக வைத்து அவற்றின் சுவர்களை ஆரோக்கியமாக்குகிறது. இதய நோய்களில் இருந்து மட்டுமல்லாமல் முள்ளங்கி இன்னும் பல பிரச்சனைகளிலிருந்து உடலை உடலை பாதுகாக்கிறது.
இந்த பிரச்சனைகளுக்கும் முள்ளங்கி நிவாரணம் அளிக்கும்:
உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் (Detox):
முள்ளங்கி ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள நச்சு மற்றும் அழுக்குகளை அகற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.
நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் (Diabetes):
முள்ளங்கியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகக் குறைவாக இருக்கிறது. ஆகையால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.
மலச்சிக்கலில் நிவாரணம் அளிக்கும் (Constipation):
மலச்சிக்கல் பிரச்சனையில் முள்ளங்கி மிகவும் நன்மை பயக்கும். இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. இதை உட்கொள்வதன் மூலம், செரிமான செயல்முறை சீராகி, மலம் கடினமாகாமல் இருக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ