Yoga Asanas For Good Sleep: கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக கருதப்படுவது, தூக்கமின்மைதான். ஸ்மார்ட் போன் பயன்பாடு, வாழ்வியல் மாற்றங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின்மை போன்ற பல விஷயங்கள் இதற்கு காரணிகளாக கூறப்படுகின்றன. பலருக்கு அவர்களது அலுவலக வேலையும் இதற்கான காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் கணினி அல்லது மடிக்கணினியை பார்க்கும் வேலையில் இருப்பவர்களுக்கு இரவில் உறக்கம் வருவதற்கு சிரமமாக இருக்கும் என கூறப்படுகிறது. சிலர், இரவு முழுவதும் தங்களுக்கு பிடித்த தொடர்கள் அல்லது படங்களை Binge Watch செய்கின்றனர். இதனாலும் இவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Insomnia என்று அழைக்கின்றனர். இதை கட்டுப்படுத்தி, இரவில் நன்றாக உறங்குவதற்கு சில யோகாசனங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோக் நித்ரா:


மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் யோகாசனங்களுள் ஒன்று, யோக் நித்ரா. இதை செய்வதால் இரவில் நல்ல தூக்கம் வரும். இதை செய்ய, முதலில் நேராக நிமிர்ந்து படுத்துக்கொண்டு உங்கள் உடலை ரிலாக்ஸ் ஆக அனுமதிக்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சினை இழுத்து விட வேண்டும். அப்படியே உங்கள் உடலை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும். 


இதனால் என்ன பயன்?


>உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது
>மன அழுத்தத்தை குறைக்கிறது
>கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கிறது
>மெட்டபாலிச சத்துகளை அதிகப்படுத்துகிறது.


பிராமரி ப்ராணாயம்:


இது ஒரு மூச்சுப்பயிற்சி முறையாகும். இந்த ஆசனத்தை கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக உபயோகிப்பர். இந்த ஆசனத்தால் நரம்புகளுக்கு நல்ல பயன் உண்டு. இதை செய்ய, முதலில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் உங்களது கண்கள், காது ஆகியவற்றை மூட வேண்டும். உங்களது ஒரு விரல் நாசியிலும் ஒரு விரல் நாசிக்கு கீழே வாயை மூடும் வகையிலும் இருக்க வேண்டும். இதை 10 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும். இது, மனதில் ஏற்படும் குழப்பங்களை நீக்க உதவும். இதனால் இரவில் நிம்மதியான தூக்கமும் வரும். 


மேலும் படிக்க | வயசான காலத்தில் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமா? அப்போ இதைசெய்யுங்க..


இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?


>பயம், பதற்றம், தூக்கமின்மை அகியவற்றை நீக்க உதவும்.
>உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.
>சைனஸ், மைக்ரேன் தலைவலி ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
>நினைவாற்றலை அதிகரிக்கும்.
>மன அழுத்தத்தை குறைக்கும்.



அனுலோம் விலோம்:


மூக்கின் இரண்டு நாசிகளிலும் மாறி மாறி மூச்சை இழுத்து விடுவதே அனுலோம் விலோம் எனும் யோகாசனம் ஆகும். இது, நரம்புகளை சாந்தப்படுத்த உதவும். இதை செய்ய, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து உங்கள் இடது கால் மீது இடது கையை வைத்து மேல் நோக்கி பார்த்து வலது கையின் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பயன்படுத்தி ஒரு நாசியை மூடிக்கொண்டு ஒரு நாசி வழியாக மூச்சு விட வேண்டும். இப்படி இடது கையாளும் செய்ய வேண்டும். இதை செய்யும் போது மூக்கால் மட்டுமே மூச்சு இழுத்து விட வேண்டும். 


இதனால் என்ன பயன்?


>மூச்சு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரிசெய்ய உதவும்.
>நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்த உதவும்.
>பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைந்த கலோரி அதிக நார்ச்சத்து மிக்க சில காய்கறிகள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ