Workout Nausea: வர்க்-அவுட் செய்யும் போது வாந்தி வருகிறதா? ‘இது’ காரணமாக இருக்கலாம்!
Workout Nausea Tamil: பலருக்கு உடற்பயிற்சி செய்யும் போது வயிற்றை புரட்டுவது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
Workout Tips Nausea Tamil: தினசரி வர்க்-அவுட் செய்வது உடலுக்கு நல்லது என்பது எந்த மருத்துவர்களும் கூறாமலேயே அனைவருக்கும் தெரிந்திருக்கும் அடிப்படை தகவலாகும். உடல் எடை குறைப்பு, உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு எரிப்பு, ஃபிட்னஸ் என பல்வேறு காரணங்களுக்காக பலர் தினமும் வர்க்-அவுட் செய்வர். ஒரு சிலர், ஏதேனும் சாப்பிட்ட பின்னர் வர்க்-அவுட் செய்வர். ஒரு சிலர், வர்க்-அவுட் செய்து விட்டு சாப்பிடுவர். அது, அவர்களின் உடலை பொருத்தும் உடற்பயிற்சி முறை பொருத்தும் மாறுபடும். இப்படி இருக்கும் சமயங்களில், சில நேரம் உடற்பயிற்சி செய்து முடித்த பிறகோ, அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதோ திடீரென்று வயிற்றை புரட்டுவது போன்ற உணர்வு ஏற்படும். இது ஏற்படுவதற்கு பற்பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
சாப்பிட்டு முடித்தவுடன் உடற்பயிற்சி செய்தல்:
சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்வதால் வயிறு புரட்டல் ஏற்படலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலில் ஓடும் ரத்த ஓட்டம் குடல் பகுதியில் இருந்து தசையை நோக்கி செல்லும். இந்த மாற்றம், உங்களது தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் புரதம் தருவதற்காக நிகழ்கிறது. ஆனால், இதுவே உடற்பயிற்சியின் போது வாயு பிரச்சனை ஏற்படவும் காரணமாக அமைகிறது. உங்கள் வயிற்றுக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்லும் போது மெதுவாக செரிமானம் ஆகும். இது, உங்கள் வயிறு புரட்டலுக்கு காரணமாக இருக்கலாம். இதனால், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
சாப்பிட்ட உடனேயே வர்க்-அவுட் செய்தால், உணவு சீக்கிரமாக செரிமானம் ஆகாது. இதனால் உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் உருவாகலாம்.
மெதுவாக செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிடுதல்:
வர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் அதற்கு ஏற்ற உணவுகளை தயார் செய்ய வேண்டும். அந்த உணவுகளையே சாப்பிட வேண்டும். அதிகம் புரதம் நிறைந்த உணவுகள், கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் எளிதில் ஜீரணமாகாது. ஃபைபர் உணவுகளும், அப்படி எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளின் லிஸ்டில் அடக்கம். இது குறித்து கூறும் மருத்துவர்கள், நாம் சாப்பிடும் உணவு பொருட்கள், ஊட்டச்சத்துகளாக மாற நேரம் எடுக்கும். அதிலும், எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்கள் இன்னும் அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே உடற்பயிற்சிக்கு முன்னர் இது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.
குறைவாகவோ அதிகமாகவோ தண்ணீர் குடிப்பது:
உடற்பயிற்சி செய்கையில் இடையிடையே தண்ணீர் குடிப்பது தசை செயல்பாட்டிற்கு முக்கியமானதாக அமையும். இது, உடலுக்கு பிற நன்மைகளயும் வழங்குகிறது. உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தேவையான அளவு தண்ணீர் குடிப்பது இன்றியமையாதது. ஆனால், இந்த தண்ணீரை வர்க்-அவுட் செய்கயில் அல்லது செய்வதற்கு மு8ன்னர் குறைவாக குடிப்பதும் உங்களது உடற்பயிற்சியை பாதிக்கும். இதனால், வர்க்-அவுட் செய்து கொண்டிருக்கும் போதே தலை சுற்றல், வயிற்று புரட்டல் ஆகியவை ஏற்படலாம். இதனால் வர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. அதிகமாக தண்ணீர் குடித்த பிறகு ஹெவியான தீவிர உடற்பயிற்சியில் ஈடபட்டாலும் வயிறு புரட்டல் ஏற்படும்.
மேலும் படிக்க | தொப்பையை உடனடியாக குறைக்கணுமா? இந்த எளிய பயிற்சிகளை தினமும் செய்யவும்!
புதிய மருந்துகளின் பயன்பாடு:
உடல் நலனுக்காக வைட்டமின் மாத்திரைகள் அல்லது வேறு நலன் நிறைந்த வேறு ஏதேனும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் வர்க்-அவுட் செய்து கொண்டிருக்கையில் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். குறிப்பாக இந்த மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டு வர்க்-அவுட் செய்தால் இந்த உணர்வை தவிர்க்க இயலாது.
திடீரென உடற்பயிற்சிகளை நிறுத்துவது:
திடீரென்று உடற்பயிற்சியை ஆரம்பிப்பதோ, திடீரென்று உடற்பயிற்சியை நிறுத்துவதோ வயிற்றுப்பிரட்டலுக்கு காரணமாக அமையலாம். எப்போதும் வர்க்-அவுட்டை தொடங்குவதற்கு முன்னர் வார்ம்-அப் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இது, உங்களின் முழு உடலையும் உடற்பயிற்சிக்காக தயார் செய்ய உதவும். அதே போல ஹெவியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதும் உடனே அதனை நிறுத்தக்கூடாது, பொறுமையாகத்தான் நிறுத்த வேண்டும்.
மேலும் படிக்க | இளம் வயதிலேயே அதிக நரைமுடியா? இந்த ஸ்பெஷல் எண்ணெய்யை யூஸ் பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ