பல நோய்களுக்கு எமனாகும் Mouth Freshener பற்றித் தெரியுமா?
வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வாசனைப் பொருட்கள் பல உண்டு. Mouth Freshner எனப்படும் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தும்போது, அதில் ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் வாங்குவோம். ஆனால், அப்படி எந்தவித சோதனையும் செய்யாமல், சுலபமாக வாயை மணக்க வைக்கும் மலிவான பொருள் என்ன தெரியுமா?
வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வாசனைப் பொருட்கள் பல உண்டு. Mouth Freshner எனப்படும் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தும்போது, அதில் ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் வாங்குவோம். ஆனால், அப்படி எந்தவித சோதனையும் செய்யாமல், சுலபமாக வாயை மணக்க வைக்கும் மலிவான பொருள் என்ன தெரியுமா?
அதுதான் சோம்பு எனும் பெருஞ்சீரகம்… என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அதிசயம் ஆனால் உண்மை.
புதுடெல்லி: இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகம் நமது வீட்டு சமையலறையில் இயல்பாக பயன்படுத்தப்படுகிறது. சிலர் சோம்பை மசாலாவாக பயன்படுத்தினால், வேறு பலர் அதை Mouth Freshner ஆக பயன்படுத்துகின்றனர். சோம்பு எனும் பெருஞ்சீரகம் ஒரு ஆயுர்வேத மருந்து என்பது தெரியுமா?
பெருஞ்சீரகம் நமது வாழ்க்கையில் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. வாய்க்கு நறுமணமூட்டி புத்துணர்வு கொடுக்கும் Mouth Freshner. விருந்துக்கு பிறகு சோம்பை வாயில் போட்டு சுவைப்பது, மணத்துக்காக மட்டுமல்ல, செரிமாணத்திற்காகவும் தான். நமது வயிற்றை தளர்த்தி, உணவை ஜீரணிக்க உதவுகிறது பெருஞ்சீரகம்.
சரும பளபளப்புக்கு சோம்பு
பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் சருமம் புத்துணர்வு பெற்று பிரகாசமாகிறது. சோம்பு ஒரு சிறந்த ரத்த சுத்திகரிப்பான். ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும். சோம்பு சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும். எடுத்துக்கொள்ளலாம். பெருஞ்சீரகம் போட்டு ஆவி பிடித்தால், கண்களின் ஒளி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
வாய் துர்நாற்றத்தை நீக்கும் சோம்பு
உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால், அரை டீஸ்பூன் சோம்பை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை மென்று சாப்பிடுங்கள். இது, வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்க்க்கு அருமருந்து சோம்பு
மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், பெருஞ்சீரகம் சாப்பிடலாம். வெல்லத்துடன் சேர்த்து சோம்பை சாப்பிடுவதால் ரத்த ஓட்டத்தில் வரும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து போகும்.
இன்னும் பல நன்மைகள்
பெருஞ்சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போல குடிப்பது அஜீரணத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. பெருஞ்சீரகத் தேநீர் குடிப்பது இருமலை குணப்படுத்தும். அதோடு, பெருஞ்சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்தினால் மாரடைப்பு அபாயம் குறையும். தினமும் பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவதால் ஆழ்ந்த உறக்கம் வரும். இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல பெருஞ்சீரகத்தின் மற்றுமொரு முக்கிய பயன்பாடு என்ன தெரியுமா? பல்வேறு ஆயுர்வேதம், யுனானி மருந்துகளிலும் பெருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR