Green Tea: இந்த நேரங்களில் மட்டும் குடிக்கவே கூடாது, பின்னர் அவதிப்படுவீர்கள்
கிரீன் டீயின் அனைத்து நன்மைகளையும் நீங்கள் பெற விரும்பினால், அதை குடிக்க சரியான நேரத்தையும் சரியான வழியையும் அறிந்து கொள்வது அவசியம்.
Health News on Green Tea: இந்தியா மற்றும் சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் கிரீன் டீ பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் கிரீன் டீ மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக அதன் எடை இழப்பு விளைவு காரணமாக, ஏராளமான மக்கள் கிரீன் டீயை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், கிரீன் டீ அன்ஆக்சிடைஸ்ட் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மிகக் குறைந்த அளவில் பதப்படுத்தப்படுகிறது. ஆகையால், இதில் ஆண்டியாக்சிடேண்டுகள் மற்றும் பாலிபினால்களின் அளவும் அதிகமாக உள்ளது.
கிரீன் டீ குடிக்க சரியான நேரம் எது என தெரிந்து கொள்வது அவசியம்
கல்லீரல் நோய்கள் முதல் வகை 2 நீரிழிவு நோய், இதய நோய், அல்சைமர் நோய் மற்றும் பல புற்றுநோய்கள் போன்ற நோய்களைத் தடுக்க கிரீன் டீ உதவும் என்று பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, கிரீன் டீ (Green Tea) ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கிரீன் டீ ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் முடியையும் மேம்படுத்த உதவும்.
கிரீன் டீ பலரின் விருப்பமாக மாறியதால், பலர், அவர்களுக்கு தோன்றும்போதெல்லாம், கிரீன் டீயை குடிக்கிறார்கள். ஆனால் கிரீன் டீயை எப்போது குடிக்க வேண்டும், எப்போது குடிக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் அதனால் உடல்நலம் பெறுவதற்கு பதிலாக உடல்நலக் குறைபாட்டை வரவழைத்துக் கொள்வீர்கள்.
இந்த நேரத்தில் தெரியாமல் கூட கிரீன் டீ குடிக்க வேண்டாம்
எந்த நேரத்தில் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என்பது பற்றி நொய்டாவில் உள்ள டயட்ரிஃபிட்டின் டயடீஷியன் அபர்னா மதிவாணன் கூறினார். கிரீன் டீயின் அனைத்து நன்மைகளையும் நீங்கள் பெற விரும்பினால், அதை குடிக்க சரியான நேரத்தையும் சரியான வழியையும் அறிந்து கொள்வது அவசியம் என்று அபர்னா கூறினார். அபர்னாவின் கூற்றுப்படி, இந்த 3 நேரங்களிலும் கிரீன் டீ குடிக்கக்கூடாது:
1.காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க வேண்டாம்:
கிரீன் டீயில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ உட்கொண்டால், அது வயிற்றில் இரைப்பை அமிலத்தை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது வயிற்று வலி, மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.
ALSO READ: வெங்காயத்தின் தோலை குப்பையில் வீசாதீர்கள்: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது
2. உணவுடன் அல்லது உணவு உட்கொண்ட உடனேயே கிரீன் டீ குடிக்க வேண்டாம்:
கிரீன் டீ செரிமான செயல்முறையை (Digestion) மேம்படுத்த உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் உணவோடு அல்லது உணவு முடிந்த உடனேயே கிரீன் டீ குடித்தால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது உடலுக்கு கடினமாக இருக்கும். மேலும் நீங்கள் உண்ணும் உணவின் பலன் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும்.
3. தூங்குவதற்கு முன் க்ரீன் டீ குடிக்க வேண்டாம்:
கிரீன் டீயில் இருக்கும் பல கூறுகள், உடலை நிதானப்படுத்த உதவுகின்றன. ஆனால் கிரீன் டீயில் காஃபின் இருப்பதால், படுக்க செல்லும் முன் அதை குடிக்க வேண்டாம். அப்படி குடித்தால், தூக்க ஹார்மோன் மெலடோனின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நல்ல உறக்கத்தை (Sleep) நீங்கள் இழக்க நேரிடும்.
(குறிப்பு: உங்கள் உணவு மற்றும் சுகாதாரம் தொடர்பான எந்தவொரு தீர்வை எடுப்பதற்கு முன்பும் எப்போதும் ஒரு நிபுணர் அல்லது மருத்துவரை அணுகவும்.)
ALSO READ: புளியால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா? புல்லரித்துப் போகவைக்கும் health news!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR