வெங்காயத்தின் தோலை குப்பையில் வீசாதீர்கள்: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது

வெங்காயத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 3, 2021, 04:06 PM IST
  • வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது.
  • வெங்காயத் தோல்களின் சாறு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • வெங்காயத் தோலை பயன்படுத்துவதன் மூலம் பிரகாசமான தோலைப் பெறலாம்.
வெங்காயத்தின் தோலை குப்பையில் வீசாதீர்கள்: இவற்றின் நன்மைகள் சொல்லி மாளாது  title=

புதுடில்லி: நம்மில் பலருக்கு வெங்காயம் மிகவும் பிடிக்கும். அனைவரும் அதை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோல்களை குப்பைகளாக வீசிவிடுகிறார்கள். வெங்காயத் தோல்களைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது.

ஆம், வெங்காயத் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்துடன் நமது சருமத்தின் அழகையும் அதிகரிக்க உதவுகின்றன. வெங்காயத் தோல்களை எந்த வகையில் பயன்படுத்தினால் ஆச்சரியப்படும் நன்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இங்கே காணலாம்.

நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க வெங்காய தோல்களைப் பயன்படுத்தலாம். பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வெங்காய தோல்களில் காணப்படுகின்றன. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வெங்காய தோல்களின் சாறு உட்கொள்ளப்படுகிறது.

வீக்கம் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது

ஒரு ஆய்வின்படி, வெங்காயத் தோல்களில் நார்ச்சத்து ஏராளமாகக் காணப்படுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்செடின் மற்றும் பினோலிக் ஆகியவை உடலில் ஏற்படும் வீக்கம், புற்றுநோய் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ: Health News: சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?

தொண்டை பிரச்சனைகளிலிருந்து நிவாரணம்

வெங்காயத் (Onion) தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குளிர், சளி காரணமாக சிலருக்கு தொண்டையில் வலி இருக்கும். வெங்காயத் தோல்களை தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த நீரைக்கொண்டு கொப்பளித்தால் நன்மை கிடைக்கும்.

முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்

முடி உதிர்தல் (Hair Fall) பலருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. வெங்காய தோல்களின் சாறு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. உங்கள் தலைமுடி வறண்டு, வளரவில்லை என்றால் வெங்காயத் தோலை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு, வெங்காயத் தோலை தண்ணீரில் கொதிக்கவைத்து, ஷாம்பு தடவிய பிறகு இந்த தண்ணீரால் முடியை கழுவவும். இது பொடுகு பிரச்சனையையும் நீக்குகிறது.

உங்கள் தோல் பிரகாசிக்கும்

வெங்காயத் தோலை பயன்படுத்துவதன் மூலம் பிரகாசமான தோலைப் பெறலாம். இதற்கு, வெங்காய சாற்றை மஞ்சளில் கலந்து முகத்தில் தடவவும். இதைச் செய்வதன் மூலம், முகத்தின் புள்ளிகள் அகற்றப்படும். வெங்காய தோல்களின் சாறு இறந்த சருமத்தை (Dead skin) அகற்ற உதவியாக கருதப்படுகிறது. இது சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல் சருமத்தை பளபளப்பாகவும் மாற்றும்.

ALSO READ: Shocking: 15 நிமிடம் குறைவாக உறங்கினாலும், உடல் பருமன், sugar, BP எல்லாம் வரும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News