பசிபிக் பகுதியில் அமைந்துள்ள வைரஸ் இல்லாத பலாவ் (Palau) நாடு, COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் நாடாக மாறக்கூடும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நாடு பலாவ் குடியரசு. இங்கு சுமார் 18,000 மக்கள் தொகை வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஒன்றுகூட பதிவாகாத நாடு இது. அதேபோல், கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிராக தடுப்பூசி போட்ட முதல் நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வார இறுதியில் நாடு மாடர்னா தடுப்பூசி (Moderna vaccine) பலாவ் குடியரசு (Republic of Palau). அங்கு தடுப்பூசி இயக்கம் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்குவதற்கு முன்பே, பலாவ் குடியரசு கடந்த ஆண்டு ஜனவரியில் எல்லைக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. 2020 மார்ச் மாதத்தில் தன் நாட்டு எல்லைகளை மூடிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் முழு பலத்துடன் தொடங்கிய கட்டுப்பாடுகளுடன் அந்த நாடு கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறி, கொரோனா வைரஸின் (Coronavirus) கொடும்பிடியில் இருந்து தப்பியது.


Also Read | CoWIN செயலியை இப்போது பதிவிறக்க வேண்டாம்; ஏன் தெரியுமா


இதுவரை பலாவ் குடியரசில் செய்யப்பட்ட அனைத்து கொரோனா பரிசோதனைகளும் எதிர்மறை முடிவையே காண்பித்துள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.  


இந்தியா (India) உள்ளிட்ட பல நாடுகள் பலாவ் குடியரசிற்கு பரிசோதனை கருவிகளை அனுப்பியுள்ளன. மே மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடித்துவிட முடியும் என்று அந்நாடு நம்புகிறது, ஆனால் அமெரிக்காவிலிருந்து எவ்வளவு விரைவாக தடுப்பூசிகள் கிடைக்கும் என்பதைப் பொறுத்து தான் இது முடிவு செய்யப்படும்.  


அமெரிக்காவிலிருந்து சனிக்கிழமையன்று 2,800 டோஸ் மாடர்னா தடுப்பூசிகள் பலாவ் குடியரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சுகாதார அமைச்சர் எமாயிஸ் ராபர்ட்ஸ் (Emais Roberts) நன்றி தெரிவித்துள்ளார்.  


Also Read | காயங்களுக்கும், தீப்புண்ணிற்கும் சிகிச்சையளிக்கும் Medical Gun


பலாவ் அமெரிக்க அரசாங்கத்தின் "Operation Warp Speed" திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்க தூதர் ஜான் ஹென்னெஸ்ஸி-நிலாண்ட் (John Hennessey-Niland), பலாவ் குடியரசை "நண்பர் மற்றும் பங்குதாரர்" என்று விவரித்தார். அடுத்த மூன்று மாதங்களில் 30,000 டோஸ் பலாவ் குடியரசுக்கு அனுப்பி வைக்கப்படும். 


கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்கா 20 மில்லியனுக்கும் அதிகமான தொற்று வழக்குகளையும் 353,620 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. இந்த வைரஸ் உலகளவில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ளது.  


Also Read | பறவை காய்ச்சலுக்கு காரணம் என்ன? இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR