Bird Flu: பறவை காய்ச்சலுக்கு காரணம் என்ன? இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?

பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்கும் பறவைக் காய்ச்சல் பரவலாம். அது பிறகு, மனிதர்களிடையே பரவும் தொற்றாக மாறினால் நிலைமை விபரீதமாகிவிடும். தற்போது நாட்டில் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2021, 10:20 PM IST
  • Bird Flu என்றால் என்ன?
  • பறவைக்காய்ச்சல் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?
  • Bird Flu மனிதர்களுக்கு பரவுமா?
Bird Flu: பறவை காய்ச்சலுக்கு காரணம் என்ன? இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது? title=

புதுடெல்லி: பறவைகளைத் தாக்குகின்ற தொற்று நோய் பறவைக் காய்ச்சல் ஆகும். பறவைகளின் வயிற்றில் இந்த நுண் கிருமிகள் பொதுவாக காணப்பட்டாலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இந்த நுண் கிருமிகள் பரவத் தொடங்கும்போது, அது வேகமாகப் பரவுகிறது.  

பறவைகளுடன் நேரடித் தொடர்புடையவர்களிற்கும் பறவைக் காய்ச்சல் பரவலாம். அது பிறகு, மனிதர்களிடையே (Human) பரவும் தொற்றாக மாறினால் நிலைமை விபரீதமாகிவிடும். தற்போது நாட்டில் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது.

நாட்டின் பல இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அச்சங்கள் அதிகரித்துள்ளன. கோழி / பறவைகள் / மீன்கள் மற்றும் முட்டை, இறைச்சி, கோழி என உணவு பொருட்களை வாங்கவும் மக்கள் அச்சப்படும் சூழ்நிலை உதவுகிறது.

Also Read | குளிர் காலத்தில் மூட்டுகளை எப்படி ஆரோக்கியமாக வைப்பது

கொரோனாவுக்கு (Coronavirus) போட்டியாக இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, கொரோனா தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பறவைக்காய்ச்சல் (Bird flu) தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. H5N1 வைரஸால் ஏற்படும் பறவைக் காய்ச்சல் (Avian Influenza) தொற்று மிகவும் ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பறவைக் காய்ச்சல் தீவிரமடையும் நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. குமரி, தென்காசி ,தேனி ,திருப்பூர், கோவை, நீலகிரி என கேரள மாநிலத்திடனான தமிழக எல்லைப் பகுதிகளில் 26 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு குளோரின் -டை -ஆக்சைடு தெளிக்கவும் கால்நடைத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.  

கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் சில பகுதிகளிலிருந்து பறவைக் காய்ச்சல் (Bird Flu) பரவியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள வாத்துகள், கோழிகள் மற்றும் பிற உள்நாட்டுப் பறவைகளைக் கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read | CoWIN செயலியை இப்போது பதிவிறக்க வேண்டாம்; ஏன் தெரியுமா

உள்நாட்டுப் பறவைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்று கேரள மாநில கால்நடை பராமரிப்பு அமைச்சர் அறிவித்திருக்கிறார்.  H5N8 வைரஸ் பரவுவதை சரிபார்க்க சுமார் 40,000 பறவைகளைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்று மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இமாச்சல பிரதேசத்தில், பாங் அணையின் ஒரு கி.மீ சுற்றளவில் அல்லது எச்சரிக்கை மண்டலத்திற்குள் மனிதர்களின் நடமாட்டம் அனுமதிக்கப்படாது என்று இந்த அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இமாச்சல பிரதேசத்தின்(Himachal Pradesh) பாங் அணை, வனவிலங்கு சரணாலயத்தில் இறந்த ஐந்து வாத்துகளின் மாதிரிகளில் H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Also Read | காயங்களுக்கும், தீப்புண்ணிற்கும் சிகிச்சையளிக்கும் Medical Gun

ராஜஸ்தானில் ஜலாவரில் இறந்த பறவைகளை (Birds) ஆய்வு செய்தபோது, அது பறவைக் காய்ச்சலை உறுதிப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், மாநிலத்தின் சில பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பறவைகள், இறந்துள்ளன. அவற்றை பரிசோதனை செய்த அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை.

மத்தியப் பிரதேசத்தில் (Madhya Pradesh) இந்தோரில் இறந்த காகங்களை பரிசோதித்தபோது, பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News