Health News: நமது உடல்நலனுக்குத் தேவையான பல முக்கிய உணவுகளில் பால் ஒரு அத்தியாவசியமான பானமாக பார்க்கப்படுகின்றது. பாலில் நமது உடலுக்குத் தேவையான, பல நல்ல கூறுகள் உள்ளன. எனினும், இந்நாட்களில் பால் உற்பத்தியில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால், பலர் முன்பு போல் பாலை உட்கொள்ள அஞ்சுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக, பாலில் (Milk) இருக்கும் லாக்டோஸை ஜீரணிப்பதில் சிலருக்கு சிரமம் இருக்கிறது என்ற ஒரு கருத்து உள்ளது. மனித உடல் தானாகவே லாக்டோஸை ஜீரணிக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறது. இதனால் பெரும்பாலும் மக்களால் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் பாலை உட்கொள்ள முடிகிறது. 


எனினும், தொடர்ந்து பால் குடித்து வந்தால், நீரிழிவு நோய் (Diabetes) ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. ஆனால், தற்போதுள்ள அறிவியல் சான்றுகள் இதற்கு மாறாகவே உள்ளன. பால் உண்மையில் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.


சில ஸ்காண்டிநேவிய நாடுகளில் இது குறித்த வழக்குகள் பதிவாகியுள்ளன


உண்மையில் இப்படிப்பட்ட கருத்து ஒரு பழைய கோட்பாடை அடிப்படையாக கொண்ட ஒன்றாகும். ஒரு சில ஸ்காண்டிநேவிய நாடுகளில் மட்டுமே இதற்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பசுவின் பால் 1 ஆம் வகை நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என்று கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு


இருப்பினும், பிற்கால ஆய்வுகள் இந்த கோட்பாட்டை நிராகரித்துள்ளன. மேற்கத்திய நாடுகளில், குழந்தை பிறந்தது முதல், 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) அதிகம் வளர்ச்சியடைவதில்லை. இதனால், எதிர்காலத்தில் அவர்கள் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.


சென்னை நகர கிராமப்புற தொற்றுநோயியல் ஆய்வு (CURES) பால் பாதுகாப்பானது என்று விவரிக்கும் அறிக்கையை வழங்கியுள்ளது. பால் நீரிழிவு நோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. ஐந்து கண்டங்களில் 21 நாடுகளில் 150,000 நபர்கள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவின் ஐந்து பகுதிகளும் சேர்க்கப்பட்டன. பால் உட்கொள்வதற்கும் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்க்கும் எந்த தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாலில் கால்சியம், ரைபோஃப்ளேவின், பாஸ்பரஸ், வைட்டமின் டி, பாந்தோத்தேனிக் அமிலம், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் நியாசின் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. பால் ஒரு சிறந்த புரத மூலமாகும். இந்தியாவில் பால் புரட்சிக்கு நன்றி, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து கணிசமாக முன்னேறியுள்ளது. பால் நம் வேத காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது, அது நமது கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு பால் மிகவும் அவசியம், ஏனெனில் இது அவர்களுக்கு மிகவும் தேவையான புரதத்தையும் கால்சியத்தையும் வழங்குகிறது.


எந்த உணவும் அளவுக்கு அதிகமானால் ஆபத்துதான். ஆகையால் பால் உட்பட அனைத்து வித உணவுகளையும் பானங்களையும், அளவோடும், அவரவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றபடியும் உட்கொண்டால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.


குறிப்பு: பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. இவற்றை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.


ALSO READ: Type 2 Diabetes: வகை 2 நீரிழிவு நோய்; அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR