Corona Health Tips: நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பச்சை மாம்பழ பானம்!

மாம்பழத்தில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி 1, பி 2, சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது தவிர, இதில் போலேட், பெக்டின், கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுகிறது.கோடைக்காலத்தில் மாம்பழ ஜூஸ் (Mango Juice) நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2021, 05:35 PM IST
  • மாம்பழம் என்பது வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் நுரைந்த பழமாகும்.
  • மாம்பழம் ஜூஸ் அருந்துவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுப்படுத்த உதவுகின்றன.
  • பச்சை மாம்பழம் ஜூஸ் சாப்பிடுவது உடலில் பித்தத்தை அதிகரிப்பதன் மூலம் குடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
Corona Health Tips: நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் பச்சை மாம்பழ பானம்! title=

ஹெல்த் செய்திகள்: கோடைகாலத்தில் (Summer Season) உடலில் ஏற்படும் வெப்பம் மற்றும் நீரிழப்பைத் தவிர்க்க, மாம்பழ ஜூஸை அருந்துவதும் மிகவும் நல்லது. அதை உங்கள் வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் நன்மை பயக்கும். இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் குறைபாட்டை  தடுக்க உதவுகிறது. மேலும், மாம்பழ ஜூஸ் எப்போதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். மாம்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுப்படுத்த உதவுகின்றன.

மாம்பழத்தில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி 1, பி 2, சி மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது தவிர, இதில் போலேட், பெக்டின், கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுகிறது.கோடைக்காலத்தில் மாம்பழ ஜூஸ் (Mango Juice) நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் அமிலத்தன்மை மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும். மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள், இரத்த கோளாறு பிரச்சனைகளை தீர்க்கும். 

ALSO READ |  கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் (Boosting Immunity) பயனுள்ளதாக இருக்கும்:

மாம்பழம் என்பது வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டின் நுரைந்த பழமாகும். இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாம்பழ ஜூஸ் தயாரிக்க குக்கரில் பச்சை மாம்பழங்களை போட்டு வேகவைக்கவும். பின்னர் அதன் தோலை உரிக்கவும்.

இதற்குப் பிறகு, ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி, அரை டீஸ்பூன் கருப்பு உப்பு (Kala Namak) மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்க்கவும். இதற்குப் பிறகு, இந்த கலவையை நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இந்த கலவையை குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கலாம்.

ALSO READ |  வயிற்று வலியா? மாத்திரை வேண்டம், பாட்டி சொன்ன வீட்டு வைத்தியங்கள் இதோ

செரிமானத்தை பலப்படுத்துகிறது:

மாம்பழம் குடிப்பதும் செரிமான அமைப்பை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது. பச்சை மாம்பழம் ஜூஸ் சாப்பிடுவது உடலில் பித்தத்தை அதிகரிப்பதன் மூலம் குடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகளை அகற்றவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

இரத்த சோகை (Anemia) தவிர்க்கவும்:

இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மாம்பழ ஜூஸ் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், பச்சை மாம்பழ பானத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, இது உடலில் இரத்தத்தின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், நீங்கள் தவறாமல் மா இலைகளை உட்கொள்ளலாம். அதுவும் உடலுக்கு நன்மைகளை தரும். 

ALSO READ |  கறிவேப்பிலையின் அள்ள அள்ள குறையாத நன்மைகள்: ஆரோக்கியம், அழகு என அனைத்தும் கிடைக்கும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News