இயற்கையாக தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் இனிப்பு சுவை மற்றும் பிசுபிசுப்பான தன்மை கொண்ட தேன் அமிர்தமாக கருதப்படுகிறது.  இயற்கையாக கிடைக்கும் தேனில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்  நிரம்பியுள்ளது, இதனை உட்கொள்வதன் மூலம் நாம் பலவித ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். காயங்களை குணப்படுத்தும் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறன் தேனில் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  தேன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படும் என்று டொராண்டோ பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.  மேலும் இது உயர் ரத்த அழுத்தம், எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்புகளை குறைப்பதும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!


தேனில் செயற்கையான நிறமிகள் எதுவுமில்லை, குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருந்தால் அதனை சரிசெய்ய மாத்திரை, மருந்துகளை பயன்படுத்துவதை விடவும் தேன் கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.  மலர்களிலுள்ள திரவத்தை எடுத்து தான் தேனீக்கள் தேனாக சேமித்து வைக்கிறது.  தினமும் இரண்டு ஸ்பூன் அளவு தேன் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் குறையும் மற்றும் கெட்ட கொலஸ்டரால் அளவு கம்மியாகி நல்ல கொலஸ்ட்ரால் உற்பத்திக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



தேனில் இயர்கையாகவே 80 சதவிகிதம் சர்க்கரை இருக்கிறது, இது அரிதான சர்க்கரைகள், புரதங்கள், கரிம அமிலங்கள் போன்ற பல கலவைகள் சேர்ந்ததாகும்.  சர்க்கரை, சிரப் அல்லது வேறு இனிப்புகளுக்கு மாற்றாக  தேனை உட்கொள்வது பல நன்மைகளை அளிக்கும்.  பதப்படுத்தப்பட்ட தேன் பாஸ்டுரைசேஷனுக்குப் பிறகு அதன் பல ஆரோக்கிய விளைவுகளை இழக்கிறது என்பது கணடறியப்பட்டுள்ளது.  செயற்கையான நிறமிகள் எதுவும் சேர்க்கப்படாமல் பதப்படுத்தப்படாத தேன் ஆரோக்கியத்திற்கு நல்லது.  ஒரு நாளில் 35-45 கிராம் பதப்படுத்தப்படாத தேனை உட்கொள்வது சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ