White Hair Remedy Fact Check | வெள்ளை முடியை கருப்பாக்க டிப்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், யூடியூக்களில் எல்லாம் ஏராளமான வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் அந்த வீடியோக்களில் சொல்லப்படும் டிப்ஸை பின்பற்றினால் வெள்ளை முடி கருப்பாகும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அண்மையில் வைரலாகியிருக்கும் ஒரு வீடியோவில் வெங்காயத்துடன் சேர்த்து புதினாவை அரைத்து, அந்த சட்னியை தாடி மற்றும் தலையில் தேய்த்தால் இரண்டு மூன்று தடவைகளில் வெள்ளை முடி எல்லாம் கருப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இப்படி ஆகுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்காயம் மற்றும் புதினா சாறுகள் வலுவான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு வலுசேர்க்கும். முடி உதிர்வதைத் தடுக்க உதவும்  மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.  ஆனால், அவை நரைத்த முடியை கருப்பாக மாற்றுவதற்கும் பங்களிக்கின்றனவா? என்பது எந்தளவுக்கு உண்மை என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உண்மையில் வெங்காயம் - புதினா கலவை நரைத்த முடியை கருப்பாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்யாக புனையப்பட்ட தகவல், இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனல்களில் அதிகம் பார்வை வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படும் வீடியோக்களே அவை.  வெங்காய சாறு முடி வளர்ச்சிக்கு உதவலாம்,


மேலும் படிக்க | எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கியத்தை கச்சிதமாய் காக்கும் ஓமம்


வயதாகும்போது முடி நரைப்பது மிகவும் இயல்பானது. ஆனால் சாம்பல் அல்லது வெள்ளை முடி கிட்டத்தட்ட எந்த வயதிலும் தோன்றும். மரபியல், மன அழுத்தம் மற்றும் சில ஹார்மோன்கள்குறைபாடுகள் போன்ற சில காரணிகள் முடியில் மெலனின் இழப்புக்கு பங்களிக்கின்றன. மனித உடலில் கோடிக்கணக்கான மயிர்க்கால்கள் உள்ளன. அதில் இருக்கும் நுண்ணறைகளில் உள்ள மெலனின் கொண்ட நிறமி முடியை உருவாக்குகின்றன. வயதாகும்போது, மயிர்க்கால்களில் உள்ள நிறமி செல்கள் இழக்கின்றன. இதன் விளைவாக முடி நரைக்கிறது.


பொதுவாக உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் மூலம் முன்கூட்டிய முடி நரைப்பதை நாம் நிர்வகிக்க முடியும், ஆனால் வயது முதிர்ச்சி அல்லது மரபியல் காரணமாக இருந்தால், நரைப்பதை மாற்றுவதற்கு இயற்கையான வழி இல்லை. வெங்காயச் சாற்றின் மூலம் முடியை கருப்பாக்க முடியும் என கூறுவது முற்றிலும் கட்டுக்கதை. புதினா இலைகளிலும் முடியை கருப்பாக்கும் எந்த ஊட்டச்சத்துகளும் இல்லை. கறிவேப்பிலை முடியை கருமையாக்க தேவையான ஊட்டச்சத்துகளை கொடுக்கும். ஆனால் நரைத்த முடியை கருப்பாக்கும் ஆற்றல் அவற்றில் இல்லை. 


முன்கூட்டியே நரைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பி6, பி12, பயோட்டின், வைட்டமின் டி அல்லது வைட்டமின் ஈ போன்ற வைட்டமின் குறைபாடுகள் முன்கூட்டியே நரைக்க வழிவகுக்கிறது. மரபியல், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், சில மருந்துகள், புகைபிடித்தல் மற்றும் டை பயன்படுத்துவது ஆகியவையும் முடி நரைப்பதற்கு முக்கிய காரணிகளாகும்.  எனவே இவற்றை கருத்தில் கொண்டு உணவு, ஆரோகியமான வாழ்க்கை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவையாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)


மேலும் படிக்க | செரிமானம் முதல் சளி, இருமல் வரை: குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இஞ்சி டீ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ