அதிக கொலஸ்ட்ரால் உள்ளதா? இந்த உணவை மறந்தும் சாப்புடாதீங்க!
துரித உணவுகள் சாப்பிட சுவையாக இருக்கும், ஆனால் அவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து பல்வேறு விதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மக்கள் இப்போது அதிகமாக துரித உணவுகளை சாப்பிட தொடங்கிவிட்டனர், அவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அவை நமது உடலுக்கு அதிக தீங்கை இழைக்கிறது, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கொலஸ்ட்ரால் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. மேலும், பல புதிய வியாதிகளையும் கொண்டு வருகிறது. இப்போது எந்த மாதிரியான துரித உணவுகளை நாம் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இங்கே காண்போம்.
1) சீஸ்பர்கர் :
முக்கால் பவுண்டு மாட்டிறைச்சி, சீஸ் சாஸ், பன்றி இறைச்சி ஜாம் மற்றும் வறுத்த வெங்காயம், பன்றி இறைச்சி துண்டுகள் மற்றும் அதிக சீஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது இந்த 'டிரிபிள் பிக் பேகன் செடார் சீஸ்பர்கர்'. இந்த பர்கரில் அதிகளவு கொழுப்பு, சோடியம் அதிகம் உள்ள ஒரு சில பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதில் 42 கிராம் நிறைவுற்ற கொழுப்பு அல்லது எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்யும் திறன் உள்ளது. ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 13 கிராம் நிறைவுற்ற கொழுப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், இதில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. இதற்கு பதிலாக 'ஸ்ட்ராபெரி சாலட்' சாப்பிடலாம், இதில் பழங்கள், காய்கறிகள் மற்றும் கோழி இறைச்சி சேர்க்கப்படுகிறது. இது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்காது.
மேலும் படிக்க | தேடி வரும் நோயை விரட்டியடிக்கும் 3 உணவுகள்
2) மெக்டொனால்டின் பிக் பிரேக்ஃபாஸ்ட் :
சாசேஜ், வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் ஒரு வெண்ணெய் பிஸ்கட் ஆகியவை நிறைந்த காலை உணவை உண்பது உங்களுக்கு பிடித்தமானதாக இருந்தாலும் அது உங்களுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும், இதை உண்பதன் மூலம் ஒரு நாளைக்கு 24 கிராம் நிறைவுற்ற கொழுப்பை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள், இது உடலுக்கு கேடு விளைவிக்கும். இந்த காலை உணவில் பழங்கள், காய்கறிகள், விதைகள் எதுவும் இல்லை, இதனால் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை கிடைக்காது.
இதற்கு பதிலாக நீங்கள் 'பழம் மற்றும் ஓட்மீல்ஸை' சாப்பிடலாம். இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த ஓட்மீல் இல்லை என்றாலும், இது உண்மையான ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் எனப்படும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே, ஓட்ஸில் செய்யப்பட்ட எந்த காலை உணவும் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
3) சப்வே சிக்கன்:
இந்த சுவையான உணவு உங்களுக்கு 22 கிராம் நிறைவுற்ற கொழுப்பையும், கிட்டத்தட்ட 60 கிராம் மொத்த கொழுப்பையும் தரும். கிரீமி ராஞ்ச் மற்றும் ஃபேட்டி பேக்கன் ஆகியவற்றின் சேர்க்கை நிச்சயமாக இதய-ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக 'ரொட்டிசெரி சிக்கன் சாலட்' சாப்பிடலாம். இதில் நீங்கள் விரும்பும் காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம் மற்றும் கிரீமுக்கு பதிலாக எண்ணெய் சார்ந்த டிரஸ்ஸிங்கைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
4) பர்கர் கிங் :
சீஸ் பர்கர்கள் உடலுக்கு ஒரு ஆரோக்கியமான உணவு என்றாலும் இதனை அளவுக்கதிகமாக சாப்பிடுவது உங்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் இந்த டிரிபிள் வோப்பர் வித் சீஸ் சாப்பிடுவதால் கிட்டத்தட்ட 40 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 2.8 கிராம் டிரான்ஸ் கொழுப்பு மற்றும் 2,200 மில்லிகிராம் சோடியம் போன்றவை உங்கள் உடலில் சேர்க்கிறது. இந்த சாண்ட்விச் இதயத்திற்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக நீங்கள் 'பர்கர் கிங் ஹாம்பர்கர் ஜூனியர் கிட்ஸ் மீள்' சாப்பிடலாம். இதில் அதிக கிரீம் அல்லது அதிக கொழுப்புள்ள டாப்பிங்ஸ் சேர்க்கப்படுவதில்லை.
5) பசிபிக் காட் மீள் :
பெரும்பாலும் கடல் உணவுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, கடல் உணவுகளில் புரதம், ஒமேகா -3 நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவை உள்ளன. ஆனால் வறுத்த மீன்கள், வறுத்த பிரெஞ்ச் ஃபிரைஸ் சேர்த்து செய்யப்படும் இந்த லாங் ஜான் சில்வரின் பசிபிக் காட் மீள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல. வறுத்த மீன்கள் உடலுக்கு ஒருபோதும் நன்மையளிக்காது, இதனை அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கண்டிப்பாக உண்ணக்கூடாது. வேண்டுமென்றால் இந்த உணவை ஒரு முறை சாப்பிடலாம், ஆனால் அடிக்கடி சாப்பிடக்கூடாது. இதற்கு பதிலாக 'லாங் ஜான் சில்வர் க்ரில்ட் சால்மன் பிளாட்டர்' சாப்பிடலாம், சால்மன் ஒரு குளிர்ந்த நீர் கொழுப்பு மீன் ஆகும், இதில் DHA ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனை நேரத்தில் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
6) KFC சிக்கன்:
ருசியான சிக்கன் சாப்பிடுவதற்கு KFC சிறந்த தேர்வு, ஆனால் இது உடலுக்கு ஏற்றதல்ல. KFC-ன் இந்த பாட் பை, அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். இதில் 25 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 40 கிராம் மொத்த கொழுப்பு மற்றும் 1,750 மில்லிகிராம் சோடியம் உள்ளது. இதற்கு பதிலாக 'KFC கென்டகி க்ரில்டு சிக்கன் தை' சாப்பிடலாம், இந்த சிக்கனின் தொடை பகுதியில் 3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் வறுக்கப்பட்ட மார்பக பகுதியில் சோடியம் குறைவாக உள்ளது. இதனுடன் பச்சை பீன்ஸ் மற்றும் இனிப்பு கர்னல் சோளம் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ