CoWIN செயலியை இப்போது பதிவிறக்க வேண்டாம்; ஏன் தெரியுமா..!!!
கோவின் (CoWIN- COVID Vaccine Intelligence Network) என்பது தடுப்பூசி வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்தும் டிஜிட்டல் தளம்.
கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. சீரம் நிறுவனத்தின் (SII) கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின் (Covaxin) ஆகியவற்றின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, இந்திய மருந்து கட்டுபாட்டு ஆணையத்தின் (DCGI) இயக்குனர் வி.ஜி சோமானி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
COVID-19 தடுப்பூசியை வழங்குவதற்கு வசதியாக, மத்திய அரசு, கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. கோவின் (CoWIN- COVID Vaccine Intelligence Network) என்பது தடுப்பூசி வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்தும் டிஜிட்டல் தளம்.தடுப்பூசி பெற இந்த செயலியின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
இருப்பினும், கூகிள் பிளே ஸ்டோரில் தற்போது இது போன்ற பல செயலிகள் உள்ளன. அது போன்ற எந்த செயலிகளையும் இப்போது பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கோவின் எனப்படும் பிளே ஸ்டோரில் பல செயலிகள் இருந்தாலும், அதிகாரப்பூர்வ செயலி இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. நாடு முழுவதும் கோவிட் -19 தடுப்பூசி விநியோக வழிமுறைகளுக்காக மத்திய அரசு புதிய கோவின் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி தற்போது அதன் தயாரிப்புக்கு முந்தைய நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் இது Google Play அல்லது ஆப் ஸ்டோரில் இல்லை.
கோவின் என்ற பெயரில் பிளே ஸ்டோரில் குறைந்தது 3 செயலிகள் உள்ளன. இவற்றில் பல செயலிகள் 10,000 க்கும் மேற்பட்ட மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. புளூடூத் மற்றும் வைஃபைக்காக தயாரிக்கப்பட்ட இந்த செயலிகளை தடுப்பூசிக்கான கோவின் செயலி என்று நினைத்து பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. அதனால் அங்கு தடுப்பூசி செயல்முறை குறித்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கப்பதில்லை.
சைபர் நிபுணர் அனுஜ் அகர்வால் இந்த வகை செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் தரவை தவறாகப் பயன்படுத்தும் சாத்தியக்கூறு உள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கோவின் தளத்தை மேலும் சிறந்த வகையில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது குறித்து இந்த செயலியின் டெவலப்பர்களை பேசியுள்ளார்
கொரோனா கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு தயாராகி வருவதால், செயலியின் விவரங்கள் இப்போது வெளிவந்துள்ளன. இந்த விவரங்கள் MeitY (சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்) தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. பயனர்கள் தற்போது பயன்பாட்டுக் கடைகளிலிருந்து கோவின் செயலியை பதிவிறக்க முடியாது, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யவும் முடியாது. சில பயனர்களுக்கு மட்டுமே இப்போது தளத்திற்கு செல்ல அணுகல் வழங்கப்பட்டுள்ளது.
ALSO READ | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 அன்று தொடக்கம்.. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்..!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR