Preventing Heart Attack & Its Symptoms: முன்பெல்லாம், வயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்படும் நோயாக இருந்த ஹார்ட் அட்டாக் என்னும் மாரடைப்பு, தற்போது இளம் வயதினரையும் குறி வைக்கிறது. இதற்கு நவீன கால வாழ்க்கை முறையே பிரதானமான காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்நிலையில், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், தவிர்க்கவும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாரடைப்பிற்கான காரணங்கள்


மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம், நமது இதய தமனிகள் சேதமடைவதுதான். தமனிகள் சேதமடைந்ததன் காரணமாக, இதயத்திற்கு ஆக்சிஜன் சப்ளை சரிவர கிடைக்காமல் போகின்றன. தமனிகள் சேதம் காரணமாக, இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டம் செல்வது தடுக்கப்பட்டு, அதனால் இதய தசைகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதை கவனிக்காத போது, மாரடைப்புக்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கின்றன.


மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ள நபர்கள்


1. உணவில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்கள், கொலஸ்ட்ரால் அதிக அளவு இருப்பவர்கள்.


2. நீண்ட காலம் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ள நபர்கள். 


3. அதிக அளவில் புகை பிடிப்பவர்கள்.


மாரடைப்பு தடுக்க, தவிர்க்க செய்ய வேண்டியவை


உணவு


இன்றைய நவீன அவசர கதியில் ஆன வாழ்க்கையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது இல்லாத நிலை உள்ளது. கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த ஊட்டச்சத்து இல்லாத, துரித உணவுகள், ஆரோக்கியத்தை பதம் பார்க்கின்றன. உடல் நோயின் கூடாரம் ஆகிவிட்டது. துரித உணவுகளை எப்போதாவது ஒரு தடவை எடுத்துக் கொள்வதால் பிரச்சனை இருக்காது. ஆனால் அதனை வழக்கமாகக் கொண்டால், சிக்கல் தான். டயட்டில், சிறுதானியங்கள், பழச்சாறுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உலர் பழங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பச்சை காய்கறிகள் ஆகியவை நிரம்பி இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Asafoetida: உணவில் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயம் செய்யும் ஆரோக்கிய மாயம்! டிரை பண்ணி பாருங்க!


தூக்கம்


நவீன யுகத்தில், செல்போன் கம்ப்யூட்டர் என இரவு முழுவதும் நேரத்தை செலவழித்து, அரைகுறை தூக்கத்துடன் பகலில் விழிப்பதால், நமது உடலின் பேட்டரி சார்ஜ் ஆகாமல், மிகவும் சோர்ந்து போகிறோம். இரவு தூக்கம் இல்லாத காரணத்தினால், இரவில் சுரக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்காமல் போவதால், மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்துடன் கூடவே, நீரிழிவு, பிபி என அனைத்தும் கூட வருகின்றன. இரவு நேர நல்ல தூக்கம், மாரடைப்பை தடுப்பதற்கான அற்புத மந்திரம்.


உடல் பயிற்சி


வாழ்க்கை வசதியாக இருக்க கண்டுபிடிக்கப்பட்ட பல கருவிகள், நமது நேரத்தை மிச்சப்படுத்துவது என்னவோ உண்மைதான். ஆனால் அவை நம் உடல் உழைப்பை இல்லாமல் ஆக்கிவிட்டன. தினமும் சராசரியாக, பத்தாயிரம் இல்லை என்றாலும் ஒரு 8000 அடிகள் ஆவது நடந்தால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நடை பயிற்சி மட்டுமில்லாமல், உங்களால் முடிந்த அளவில் சைக்கிளிங், ஜாகிங், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளை செய்யலாம். முடியாதவர்களுக்கு நடை பயிற்சி ஒன்றே போதுமானது. இது தவிர லிப்ட் எஸ்கலேட்டர் ஆகியவற்றை தவிர்த்து, மாடிப்படிகள் ஏறுவதும், இதயத்திற்கான சிறந்த கார்டியோவாஸ்குலர் பயிற்சி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


மாரடைப்புக்கான அறிகுறிகள்


1. லேசான அல்லது கடுமையான மார்பு வலி, கைகள் கழுத்து தாடைகள் மற்றும் பின்புறம் உள்ள பகுதிகளுக்கு பரவும் உணர்வு.


2. யாரோ ஒருவர் மார்பு பகுதியை அழுத்துவது போன்ற


3. சோர்வு, தலைசுற்றல் மற்றும் மூச்சு திணறல்.


4. அதிக வெப்ப நிலை இல்லாத நிலையிலும், அதீத வியர்வை ஏற்படுதல்.


5. அஜீரணம், நெஞ்செரிச்சல், குமட்டல் உணர்வுகள்.


மேலே கூறப்பட்ட அறிகுறிகள் இருந்தால் அது மாரடைப்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம். 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் மறைந்து விட்டால் அதனை மைனர் ஹார்ட் அட்டாக் என்று கூறுவார்கள். 20 நிமிடங்களுக்கு மேலாக அறிகுறிகள் நீடித்தால், அது தீவிரமான மாரடைப்பாக கருதப்படும். எதுவாக இருந்தாலும் உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக் கொள்வது முக்கியம். அலட்சியம் காட்டினால், அதற்கு பெரும் விலை கொடுக்கும் நிலை ஏற்படலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ