சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் 5 அபார யோக முத்திரைகள்

Yoga Mudras For Diabetes: இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் உலக அளவில் பலரை பாடாய் படுத்தி வருகிறது. நீரிழிவு நோய் (Diabetes) என்பது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை சார்ந்த ஒரு நோயாகும். 

Yoga Mudras For Diabetes: இதை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடுகள் அவசியம். எனினும், பல நீரிழிவு நோயாளிகள் பலவிதமான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் போதிலும் பலரால் இந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு யோகாசனங்களும் யோக முத்திரைகளும் (Yog Mudras) மிகவும் உதவியாக இருக்கும்.

1 /8

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கென்று சில பிரத்தியேகமான யோக முத்திரைகள் உள்ளன. பொதுவாகவே யோகாசனங்கள் (Yoga Asanas) செய்வதால் நாம் நமது ஆன்மீக குணங்களை உணர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உணரத் துவங்குகிறோம். சில யோகாசனங்கள் மற்றும் யோக முத்திரைகளை செய்வதால் இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுக்குள் வைக்கலாம்.

2 /8

நம் கைகள் கொண்டு, இருந்த இடத்திலேயே செய்யக்கூடிய சில யோக முத்திரைகளை அவற்றுக்கான சரியான வழியில் செய்வதன் மூலம் வாழ்க்கைமுறை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க நமக்கு பெரிய அளவில் உதவும் சில யோக முத்திரைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /8

நச்சுக்களை நீக்குவதற்கான முத்திரையாக இது பார்க்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன் இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது. பிராண முத்திரை செய்ய உங்கள் இரண்டு கைகளும் தேவைப்படும். உங்கள் கட்டை விரல் நுனியால், உங்கள் மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் நுனிகளை தொடவும். மற்ற விரல்களை நேராக வைக்கவும். இப்படி 5 நிமிடத்திற்கு வைத்திருக்கவும். இப்படி 3 முறை செய்ய வேண்டும். 

4 /8

அபான முத்திரை மிகவும் எளிதான ஒரு முத்திரையாகும். நீரிழிவு நோய் மற்றும் இரத்த கொதிப்பு என இரண்டுக்கும் இது தீர்வாக அமைகிறது. இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இது உதவும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களையும் இது நீக்கும். இதை செய்யும் போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக தோன்றும். இதை செய்ய, நடுவிரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கொண்டு கட்டைவிரல் நுனியை தொட வேண்டும். இதை செய்யும்போது உங்கள் ஆள்காட்டி விரல் மற்றும் சிறுவிரல் நேராக இருக்க வேண்டும். இதை இரு கைகளிலும் செய்யலாம். இந்த நிலையில் உங்கள் விரல்களை ஐந்து நிமிடத்திற்கு வைத்திருக்கவும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். 

5 /8

சூரிய முத்திரை நமது உடலில் அக்னி குணத்தை அதிகரித்து வெப்பத்தை உருவாக்குவது. இந்த முத்திரை செய்வதால் நீரிழிவு நோய் மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீரமைக்க இந்த முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையை செய்ய முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். அதன் பிறகு கட்டை விரலால் மோதிர விரலை தொட முயற்சிக்கவும். இப்படி ஐந்து நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். இதே போல் மூன்று முறை செய்ய வேண்டும்.  

6 /8

இது ஆண்களின் இனப்பெருக்க உறுப்பை குறிப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும். இந்த முத்திரை உடலில் நெருப்பின் அடையாளமாக உள்ள உருப்புகளை செயல்படுத்துகிறது. உடல் பருமன் நீரிழிவு நோய்க்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. லிங்க முத்திரை உடல் பருமன் மற்றும் நீரிழிவு என இரண்டையும் சரி செய்கிறது. உங்கள் உடல் பருமன் எவ்வளவு அதிகமாகின்றதோ அந்த அளவு இரத்த சர்க்கரை அளவு அதிகமாகிறது. இந்த முத்திரை செய்ய முதலில் உங்கள் கைகளில் விரல்களை ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும். அதன் பிறகு இடது பெருவிரலை உயர்த்தி, வலது பெருவிரலால் அதை மூடவும். உங்களால் எவ்வளவு நேரத்திற்கு முடியுமோ, அவளவு நேரம் இதை செய்து கொண்டிருக்கலாம். 

7 /8

இந்த முத்திரை உங்களை ஆசுவாசப்படுத்தும் முத்திரையாக பார்க்கப்படுகின்றது. இது உங்கள் பதட்டங்களையும் மனக்கவலைகளையும் குறைக்க உதவும். இதனால் உங்கள் மன அழுத்தம் குறையும். இதை அமர்ந்த நிலையில் செய்வது நல்லது. இதை செய்ய உங்கள் ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரன் நுனியை தொடவும். மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக நீட்டி வைக்கவும். இப்படி இரு கைகளையும் வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, அமைதியாக ரிலாக்ஸ் செய்யவும், உடலை ஓய்வெடுக்க அனுமதிக்கவும். இந்த முத்திரையை செய்த பின்னர் உங்கள் உடலில் உள்ள அனைத்து வகையான எதிர்மறை அம்சங்களும் குறைய தொடங்குவதை நீங்கள் உணரலாம்.

8 /8

அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.