உடல் எடையைக் குறைக்க பீட்ரூட் ஜூஸ் எப்படி உதவும்: இன்றைய காலக்கட்டத்தில், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் அவர்களுக்கு பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் அளவிற்கு மாறிவிட்டது. அதில் ஒன்று தான் அதிகபடியான எடை அதிகரிப்பு. நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் கூட உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். உடல் எடையை அதிகரிக்க நேரம் எடுக்காது, ஆனால் அதை குறைக்க அதிக வியர்வை சிந்த வேண்டியிருக்கும். எனவே உங்களுக்கும் இதே பிரச்சனை இருந்தால், உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் ஒரு பானத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த பானம் பீட்ரூட் ஜூஸ் ஆகும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன், உங்கள் எடையைக் குறைக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பீட்ரூட் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடையை சுலபமாக குறைக்க உதவும். எனவே இப்போது இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | ஒல்லியா இருக்கீங்களா? கவலைப்படாதீங்க - தினமும் வெல்லம், நெய் மட்டும் சாப்பிட்டு பாருங்க


உடல் எடையை குறைக்க பீட்ரூட் ஜூஸ் | Beetroot Juice for Weight Loss


ஆப்பிள் மற்றும் பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆப்பிளை கலந்தும் இதன் ஜூஸை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஏனெனில் பீட்ரூட்டின் சுவை சற்று துவர்ப்பு தன்மை கொண்டது. அத்தகைய சூழ்நிலையில், அதனுடன் ஆப்பிளைக் கலந்து அதன் சுவையை சமப்படுத்தலாம். எனவே இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


இதை செய்ய, உங்களுக்கு இரண்டு கப் பீட்ரூட், ஒரு கப் ஆப்பிள், இலவங்கப்பட்டை தூள், உப்பு மற்றும் கருப்பு மிளகு தேவை.


இதை செய்ய பீட்ரூட், ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டையை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
இப்போது அதை ஒரு கிளாஸில் எடுத்து உப்பு சேர்த்து உட்கொள்ளவும். வேண்டுமானால் வடிகட்டியும் குடிக்கலாம்.


கேரட் மற்றும் பீட்ரூட்
பீட்ரூட்டின் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது என்று நாம் முன்பே சொன்னது போல, அதன் சுவையை சமநிலைப்படுத்த, அதனுடன் கேரட்டைச் சேர்த்தும் அதன் ஜூஸை தயார் செய்யலாம்.


இதற்கு கேரட் மற்றும் பீட்ரூட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். இப்போது அதில் உப்பு கலந்து குடிக்கவும். சுவையை மாற்ற எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.


பீட்ரூட் மற்றும் செலரி
செலரியில் குறைந்த அளவு கலோரியும் நிறைய தண்ணீர் சத்தும் உள்ளது. அதேசமயம் பீட்ரூட்டில் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த இக்கலவையானது எடையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இதற்கு  முதலில் பீட்ரூட் மற்றும் செலரியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும். எலுமிச்சை சாறு கலந்து சுவை மிக்க இந்த பானத்தை பரிமாறலாம்.


இதேபோல், உங்களுக்கு பிடித்த பழங்களுடன் மாதுளை, தக்காளி போன்றவற்றை கலந்து பீட்ரூட் சாறு தயார் செய்யலாம். எடை இழப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


( பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | நீரிழிவு நோய்: மருந்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை, தண்ணீர் கஷ்கொட்டை போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ