தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுபவர் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். An Apple a Day, Keeps the Doctor Away என்னும் பழமொழியை கேட்காதவர் இருக்க இயலாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சத்துக்கள் ஆப்பிளில் உள்ளன. இது தவிர, ஆப்பிள் உடல் எடை குறைப்பதிலும் மிகவும் உதவியாக உள்ளது. இது வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது அதிகபட்ச பலன்களைத் தரும். பெரும்பாலானோருக்கு காலையில் முதலில் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், ஆப்பிள் டீ செய்து குடிக்கலாம். ஆப்பிள் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதை எப்படி செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கு பெரிதும் உதவும்


ஆப்பிள் டீ உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. நீங்கள் விரும்பினால், உடற்பயிற்சி செய்த பிறகும் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஆப்பிளில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகள் இருப்பதால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கண்பார்வை குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | படிகாரத்தில் இத்தனை நன்மைகளா... வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்!


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்


ஆப்பிள் டீயில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் உங்கள் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். இது தவிர, இதை குடிப்பதால் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையும் குறைகிறது. ஆப்பிள் டீ குடிப்பதால் செரிமானம் சரியாகும்.


ஆப்பிள் டீ தயாரிக்கும் விதம்


ஆப்பிள் டீ தயாரிக்க, உங்களுக்கு ஆப்பிள், எலுமிச்சை சாறு மற்றும் இலவங்கப்பட்டை தூள் தேவைப்படும். இதைச் செய்ய, முதலில் ஆப்பிளை சிறிய துண்டுகளாக வெட்டி தனித்தனியாக வைக்கவும். அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை சூடாக்கி, தண்ணீர் போதுமான அளவு சூடானதும், அதில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் ஆப்பிள் துண்டுகளை போட்டு, சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் பாதியாகக் கொதித்ததும் வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும்.  இப்போது உங்கள் ஆப்பிள் டீ தயார். 


மேலும் படிக்க | Health Alert: கல்லீரலை மெல்ல கொல்லும் ‘சில’ ஆபத்தான உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ