சர்க்கரை நோயை ஓட விரட்டும் ‘மேஜிக்’ ஜூஸ்! தயாரிப்பது எப்படி!

Diabetes Home Remedies: மூன்று காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி ஜூஸ்  குடிப்பதால் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, பல நோய்களில் இருந்து விடுபடலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 19, 2022, 08:34 PM IST
  • சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
  • சளி, இருமல் போன்ற நோய்கள் குளிர்காலத்தில் மிகவும் பொதுவானவை.
  • காய்கறிகள் அனைத்திலும் சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
சர்க்கரை நோயை ஓட விரட்டும் ‘மேஜிக்’ ஜூஸ்! தயாரிப்பது எப்படி! title=

இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. இந்நிலையில், மூன்று காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி ஜூஸ்  குடிப்பதால் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, பல நோய்களில் இருந்து விடுபடலாம். இதை எப்படி தயாரிப்பது மற்றும் எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பதை அறிந்து கொள்ளலாம்

பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் சில காய்கறிகளில் அடங்கும். இந்த காய்கறிகள் அனைத்திலும் சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த மூன்றும் சாலட் வடிவில் மிகவும் விரும்பப்படுகிறது. பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சாறு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது என்பது மிகச் சிலருக்குத் தெரியும். புரதம், நார்ச்சத்து, சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் பாகற்காயில் உள்ளன. இந்த மூன்றின் ஜூஸை எப்படி செய்யலாம், குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை கட்டுப்படுத்தப்படுகிறது

பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவை நீரிழிவு அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி சாறு குடிக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் சாப்பிடுங்கள். இது உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்

இந்த மூன்றின் சாறு, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து. பாகற்காய் மற்றும் வெள்ளரிக்காயில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் உணவை எளிதில் ஜீரணிக்கும். இது தவிர, குடல்களை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இந்த சாறு வயிற்றை சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சளி, இருமல் போன்ற நோய்கள் குளிர்காலத்தில் மிகவும் பொதுவானவை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸை குடிக்கலாம். வைட்டமின் சி தக்காளியில் நல்ல அளவில் காணப்படுகிறது. அதனால்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உங்களுக்கு அடிக்கடி சளி தொல்லை ஏற்பட்டு வந்தால், இந்த சாற்றை தினமும் சாப்பிடுங்கள்.

ஜூஸ் தயாரிக்கும் முறை

பாகற்காய், வெள்ளரி மற்றும் தக்காளி சாறு தயாரிக்க, முதலில் பாகற்காய் தோலை நீக்கவும். அதன் பிறகு வெள்ளரி மற்றும் தக்காளியை மெல்லியதாக நறுக்கி, இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். இப்போது அதன் சாறு எடுத்து வடிகட்டி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Alert! 'இவற்றை' சாப்பிட்ட பிறகு பால் அருந்தக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News