Dry Fruits That Will Help You To Loose Weight : நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவரா? அப்போ கண்டிப்பாக அதற்காக சில டயட் அட்டவணையை தயார் செய்து வைத்திருப்பீர்கள். உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினமான காரியம் என்று, அந்த முயற்சியில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். சரியான உடற்பயிற்சி, ஸ்ட்ரிக்டாக டயட் ஃபாலோ செய்வது என உடல் எடை இழப்பில் பல்வேறு வகையான கடின உழைப்புகள் நிறைந்திருக்கிறது. அதில், குறிப்பாக பலர் இணைத்துக்கொள்ள வேண்டியது, புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வதாகவும். அப்படி, உடமல் எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நட்ஸ்கள் யாவை என்பதையும், அவற்றால் என்ன பயன் என்பதையும் இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேசில் நட்ஸ்:


பிரேசில் நட்ஸ்கள், நல்ல ஊட்டச்சத்து நிறைந்த நட்ஸ் வகைகளுள் ஒன்றாகும். இது உங்கள் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவது உள்பட பல்வேறு வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கிறது, பிரேசில் நட்ஸ். இதயம், மூளை மற்றும் தைராய்டு சுரப்பி கட்டுப்பாடு, அத்துடன் வீக்கம் குறைப்பிற்கும் பிரேசில் நட்ஸ் உதவுகிறது. இந்த நட்ஸ், 
நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக இருக்கிறது. மேலும் அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நீங்கள் பசியின்றி உணரவும் குறைவாக சாப்பிடவும் உதவுகிறது. 


பேரிச்சம்பழம்:


பேரிச்சம்பழங்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களின் வழக்கமான உணவுத் திட்டத்திற்கு ஒரு அருமையான கூடுதல் உணவாக அமைகிறது. ஏன் என்றால், இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நார்ச்சத்துகளும் ஏராளமாக உள்ளன. பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து மலச்சிக்கலையும் தடுக்க உதவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது, செரிமான செயல்பாட்டை மெதுவாக்கி, நீண்ட நேரம் பசி உணர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. 


முந்திரி:


முந்திரியில், புரதம், இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகிய சத்துகள் உள்ளன. மேலும் சர்க்கரையின் அளவு இதில் குறைவாகவே உள்ளது. முந்திரி சாப்பிடுவதால் எலும்புகள் ஆரோக்கியமாகும், அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் உருவாக்கம் அதிகிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முந்திரியில் உள்ள அதிக மெக்னீசியம் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது எடை இழப்புக்கு உதவுவதாக சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | தினமும் சாம்பார் சாப்பிடுறீங்களா.. இந்த நோய்கள் உங்களை பாடாய் படுத்தலாம்


பிஸ்தா:


வைட்டமின் பி6 சத்துகள் அதிகம் உள்ள உணவுகளில் ஒன்று பிஸ்தா. வைட்டமின் பி6 சத்து, நமது உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு இன்றியமையாததாகும். ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கும் பிஸ்தா உதவுகிறது. பிஸ்தா விதைகள், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. 


அத்திப்பழம்:


அத்திப்பழங்களில் காப்பர் மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன. அது மட்டுமன்றி, இந்த பழத்தில் நல்ல கொழுப்புகளும் இயற்கையான சத்துகளும் நிறைந்துள்ளது. இதில் அதிகமான புரதச்சத்து இருப்பதும் மருத்துவர்கள் இதை பரிந்துரைக்க ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. இதில் இருக்கும் ஒமேகா 3 சத்துகள் உடல் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் மெட்டபாலிச ஆற்றலும் அதிகரிக்கிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ