ஒல்லியான உடலைப் பெறுவதும், உடல் எடையை குறைப்பது கடினம் அல்ல. அதற்கான முக்கியமான வழி, நாம் உண்ணும் உணவை ஒழுங்காக திட்டமிட்டாலே போதும். உடல் எடையை குறைப்பதற்கான சுலபமான வழி இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் பல இருந்தாலும், அவை ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே, நமக்கு எது சிறந்தது என்பதைப் பார்க்க, உணவுமுறை மற்றும் வொர்க்அவுட்டைப் பரிசோதித்துக்கொண்டே இருக்க வேண்டும். 


ஒரு குறிப்பிட்ட பயிற்சியும் உணவும் நமக்கு சரியானதாக அமைந்துவிடும். எடை இழப்புக்கு உதவும் உணவுகளில் உலர் திராட்சை மற்றும் வெல்லம் கலந்த தண்ணீர் நல்ல பலனளிக்கிறது.


மேலும் படிக்க | கொழுப்பை குறைத்து உடல் எடையை பராமரிக்க சியா விதைகள்


திராட்சை மற்றும் வெல்லம் இரண்டு சூப்பர்ஃபுட்களின் கலவை 
திராட்சை மற்றும் வெல்லம் ஆகியவை ஆரோக்கியத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்களால் நிரம்பியிருப்பதால் சூப்பர்ஃபுட்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. 


இந்த இரண்டுமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், சுவாச மண்டலத்தைச் சுத்தப்படுத்தவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. 



இந்த சூப்பர்ஃபுட்கள் ஒன்றாக இணைந்தால், எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்தும். அதாவது உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொண்டு அதில் வெல்லத்தை கலந்து குடிப்பது இந்த கோடையில் நீர்ச்சத்தையும் கொடுக்கும்.


நீர்ச்சத்துடன், உடல் எடை குறைப்புக்கான பானமாகவும் இது செயல்படும்.


வெல்லத்தின் சத்துக்கள் மற்றும் நன்மைகள்
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீசு, இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்த வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகும்.


சர்க்கரையைப் போலல்லாமல், வெல்லத்தில் கலோரிகள் மட்டுமல்ல, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன, இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.


மேலும் படிக்க | தாயின் ஆரோக்கியமே குடும்பத்தின் நிம்மதி: தாய்மார்களுக்கான சூப்பர் உணவுகள்


எடை இழப்புக்கு வெல்லம் எவ்வாறு உதவுகிறது
வெல்லத்திலும் கலோரிகள் குறைவு; 20 கிராம் வெல்லத்தில் 38 கலோரிகள் உள்ளன. இந்த இயற்கை இனிப்பு எலெக்ட்ரோலைட் அளவை சமப்படுத்தவும், உடலில் நீர் கோர்க்காமல் தடுக்கவும் உதவுகிறது. வெல்லத்தை உண்பதால், எடை இழப்பு செயல்முறை உத்வேகம் பெறும். அனால், வெல்லத்தை ஒரு குறிப்பிட்ட அளவு பயன்படுத்தினால் போதுமானது.


திராட்சையின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள்
நார்ச்சத்து நிறைந்த, உலர் திராட்சை பசியைத் தணிக்கிறது, அதீத பசி எடுக்காமல் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உலர் திராட்சை நல்ல தேர்வு. 


திராட்சையில் இருக்கும் இயற்கை இனிப்புகள் மற்றும் இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஊட்டத்தை அளிக்கின்றன. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும் திராட்சையை உணவில் சேர்க்கலாம்.


திராட்சை மற்றும் வெல்லம் தண்ணீரை எப்படி எடுத்துக்கொள்வது?
வெதுவெதுப்பான நீரில் 4-5 திராட்சையை ஒரே இரவில் ஊற வைக்கவும். காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிய துண்டுகள் (5 கிராம்) வெல்லம் போடவும்.



முதலில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டுவிட்டு, வெல்லம் கலந்த தண்ணீரைக் குடிக்கவும். இதை தினமும் செய்து வந்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கலாம்.


திராட்சையை சாப்பிட மற்றொரு வழி தயிர். தயிரை 4-5 திராட்சையுடன் சேர்த்து, உணவுக்குப் பிறகு சாப்பிடுங்கள். இந்த செய்முறை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.


வெல்லம் மற்றும் திராட்சை இரண்டும் எடை இழப்புக்கு நல்லது, ஆனால் நீங்கள் அவற்றை மிதமாக உட்கொண்டால் மட்டுமே அது பலனளிக்கும். இரண்டு சூப்பர்ஃபுட்களில் ஏதேனும் ஒன்றை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். 
அதிலும் குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள்  மற்றும் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்கள், இந்த எடை இழப்பு தீர்வை முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நீரிழிவுக்கு குட்பை சொல்லி ரத்த அளவை சீராக்கும் கீரைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR