Dengue Fever: தற்போது தமிழகத்தில் வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. கூடவே பல மழைக்கால நோய்களும் ஏற்பட துவங்கி உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து முடிவு கிடைத்தாலும் இந்த மழைக்காலத்தில் டெங்கு மற்றும் பொதுவான மழைக்கால நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளதால் கூடுதல் கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாதாரண காய்ச்சலுக்கும் டெங்குவிற்கு சற்று வித்தியாசங்கள் உள்ளன. எனவே சில ஆரம்பகால அறிகுறிகளை வைத்து இதனை கண்டுபிடிக்கலாம். அதேபோல மழைக்காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத சில விஷயங்களும் உள்ளன. இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் 


வீட்டில் அதிக நீர் தேங்கி இருந்தால் அதனை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. மேலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க நமது தினசரி வழக்கத்திலும் சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கியவுடன் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் டெங்கு ஆபத்தில் உள்ளனர். சிலருக்கு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் அதிகம் பரவுகிறது. இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து கொண்டால் சரி செய்துவிடலாம். இல்லை என்றால் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் முதலில் உடல் வெப்பநிலை பல மடங்கு உயரும்.


டெங்கு காய்ச்சலுக்கு செய்ய வேண்டியவை


மழைக்காலத்தில் கொசுக்கள் உங்களை கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது கொசு கடிக்காமல் இருக்க கிரீம்களை தடவி கொள்ளலாம். வீட்டில் இருக்கும் போது குறிப்பாக மாலை வேளையில் வீட்டில் புகைமூட்டம் போடலாம் அல்லது கொசு விரட்டியை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். மேலும் கொசுக்கடிப்பதை தடுக்க முழு உடலையும் மறைக்கும் அளவிற்கு ஆடைகளை அறியலாம். இதன் மூலம் ஓரளவிற்கு கொசு கடிப்பதை தடுக்கலாம். குறிப்பாக மழை காலத்தில் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவற்றில் தான் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும். உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது எந்தவித பாதிப்புகளில் இருந்தும் தடுக்க உதவும். மழைக்காலத்தில் திடீர் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.


டெங்கு காய்ச்சலுக்கு செய்ய கூடாதவை


இந்த சமயத்தில் காய்ச்சல் அல்லது தலைவலி ஏற்பட்டால் மருத்துவரின் அறிவுரைகள் இல்லாமல் எந்தவித மருந்துகளையும் எடுத்து கொள்ள வேண்டாம். சில மருந்துகள் டெங்குவின் அறிகுறிகளை மோசமாக்கும். இந்த சமயத்தில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை டெங்கு நோயாளிகளுக்கு இரத்தப்போக்கு மற்றும் பிற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உடல் வலி மற்றும் காய்ச்சல் அதிகம் இருந்தால் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுங்கள். இந்த சமயத்தில் கடுமையான வேலைகளை செய்ய வேண்டாம். மேலும் கொசு அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும். வீட்டின் பின்புறம் அல்லது மழை நீர் தேங்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். மேலே குறிப்பிட்டுள்ள இந்த விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். இருப்பினும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.


மேலும் படிக்க | மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ