இந்த அறிகுறி இருந்தா எச்சரிக்கை; உங்களுக்கு சுகர் இருக்கலாம்
Sweating In Diabetes: உடல் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால், அது சர்க்கரை நோய்க்கான எச்சரிக்கை மணியாகும். இதன் பொருள் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதாகும்.
சர்க்கரை நோய் என்பது ஒருமுறை வந்தால் இறக்கும் வரை இருக்கும். இந்த நோயை முழுமையாக ஒழிக்க முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நோய் மோசமான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறையின் விளைவால் உருவாகிறது. அதனால் தான் இருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்கள் தங்களின் உணவு முறையில் கணவன் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். சரியான நேரத்தில் சர்க்கரை அளவை உடலில் கட்டுபடுத்தவில்லை என்றால் அவை இதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் வரும் அபாயத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளை நாம் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
உடல் இயல்பை விட அதிகமாக வியர்க்கத் தொடங்கும்
உடலில் வியர்ப்பது மிகவும் இயல்பான செயல்முறையாகும் , இது கோடை மற்றும் ஈரப்பதமான காலநிலையில் மிகவும் பொதுவானது, ஆனால் உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் கட்டாயம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற நிலையை மருத்துவத்தில் இரண்டாம் நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், அது பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயை கால் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்!
அதிக வியர்வைக்கான காரணம்
உடல் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தால், அது சர்க்கரை நோய்க்கான எச்சரிக்கை மணியாகும். இதன் பொருள் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதாகும். இதன் காரணமாக உடலில் இருந்து பல்வேறு ஹார்மோன்கள் வெளியாகும். குறிப்பாக அட்ரினலின் வெளியேறும் போது, உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியேறத் தொடங்குகிறது. நீரிழிவு நோய் நமது வியர்வை சுரப்பிகளை பாதிக்கும்.
அதிகப்படியான வியர்வை நீரிழிவு நோயின் அறிகுறியாக கருதப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், இது வேறு பல காரணங்களாலும் இருக்கலாம். நீங்கள் உடல் பருமனுக்கு பலியாகும்போது கூட இரண்டாம் நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் உங்கள் உடலைத் தாக்கலாம், ஏனெனில் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது மற்றும் இதன் காரணமாக, அதிக வியர்வை வரத் தொடங்குகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ