தினமும் வேப்பிலை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன

Neem Juice Benefits: வேப்ப இலைகள் பெரும்பாலும் கோடையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி பல வகையான நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 11, 2022, 05:33 PM IST
  • வேம்பின் நன்மைகள், பயன்கள்
  • ஈறு பிரச்சனையிலும் நன்மை பயக்கும்
  • எடை கட்டுப்படுத்த உதவும்
தினமும் வேப்பிலை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன title=

வேப்ப இலைகள் பல வித மருத்துவ குணங்கள் அடங்கிய இலைகளாகும். வேம்பு பற்றியும் அவற்றின் முழுமையான ஆரோக்கிய பயன்கள் பற்றியும் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இந்த இலை பெரும்பாலும் கோடையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி பல வகையான நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது.

வேம்பின் பலன்கள்
வேம்பு உடலுக்கு பல வித நன்மைகளை பயக்கும் ஒரு பொருளாகும். குறிப்பாக, சருமத்திற்கு வேம்பினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். இந்த சாறு கசப்பாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், சருமத்தைப் புத்துணர்ச்சியூட்டுவதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைத் தவிர, வேம்பின் மற்ற நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | Health Tips: பப்பாளி பழத்தை ‘இதனுடன்’ மறந்தும் சாப்பிடக் கூடாது

ஈறு பிரச்சனையிலும் நன்மை பயக்கும்
ஈறு பிரச்சனையை நீக்க வேப்பம்பூ சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வேப்பம்பூ சாறு குடிப்பதால் ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள பிரச்சனை குறைகிறது. நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக வேப்பங்குச்சிகள் பல் தேய்க்க பயன்படுத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. இது வாயில் பாக்டீரியா வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. வேப்பம்பூ சாற்றை மவுத் வாஷ் போல் பயன்படுத்தி, அதன் மூலம் வாயை கொப்பளித்தால், அது பற்களில் இருந்து பிளேக்கை குணப்படுத்துவதோடு, ஈறுகளின் பிரச்சனையையும் நீக்குகிறது.

முகம் பளபளக்கும்
சருமத்தில் பளபளப்பைக் கொண்டுவர, கண்டிப்பாக வேப்பம் சாறு குடிக்க வேண்டும். வேப்பம்பூ சாறு இயற்கையாகவே நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தினால், உங்கள் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறும். வேப்பஞ்சாறு உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பளபளப்பாக மாற்றும்.

எடை கட்டுப்படுத்தப்படும்
எடையைக் கட்டுப்படுத்தவும் வேப்பஞ்சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். அதன் நுகர்வு செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் உடல் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. இதனால் உங்கள் எடையை மிக வேகமாக குறைக்க முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News