நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் இந்த 3 மசாலாக்களை பாலில் கலந்து குடிக்கவும்
Diabetes Diet: சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு ஒருமுறை வந்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் நோயாளியை விட்டு விலகாது, தற்போது அதை வேரில் இருந்து அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் நாம் மனம் வைத்தால் கண்டிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். பொதுவாக நீரிழிவு நோயில் நீங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கத் தவறினால், அது சிறுநீரக நோய், மாரடைப்பு மற்றும் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கச்செய்யும். குளுக்கோஸ் அளவை பராமரிப்பது எளிதானது அல்ல, ஆனால் நீங்கள் ஒரு சிறப்பு வழியில் பால் உட்கொண்டால் கண்டிப்பாக ஆச்சரியமான பலன்களைத் தரும்.
பால் மற்றும் மசாலா கலவை நன்மை பயக்கும்
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், சில வீட்டு மசாலாப் பொருட்களை பாலில் கலந்து குடித்தால், அது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த எளிதாக்கும் என்று கூறினார். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மசாலாப் பொருட்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
நீரிழிவு நோயாளிகள் இந்த 3 மசாலாப் பொருட்களை பாலில் கலந்து குடிக்கவும்
1. மஞ்சள்
மஞ்சள் பெரும்பாலான இந்திய சமையல் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதில் உள்ள குர்குமின் அளவு காரணமாக இரத்த குளுக்கோஸ் அளவையும் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் தூளை பாலில் கலந்து அருந்தலாம். நீரிழிவு தவிர, இந்த மாசாலா பொருள் சளி, காய்ச்சல், தொண்டை புண் மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் தர உதவுகிறது.
2. இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டையை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது, ஏனெனில் அதில் உயிர்ச்சக்தி கொண்ட கூறுகள் நிறைந்துள்ளன. அன்னல்ஸ் ஆஃப் ஃபேமிலி மெடிசின் அண்ட் டயாபெட்டிஸின் ஆய்வின்படி, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் இலவங்கப்பட்டையில் இருந்து நிறைய நன்மைகளைப் பெறுகிறார்கள். இதற்கு ஒரு கிளாஸ் பாலில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்து வந்தால் அதன் பலன் சில நாட்களிலேயே நீரிழிவு நோயாளிகளுக்கு தெரியும்.
3. வெந்தயம்
வெந்தயத்தின் மஞ்சள் தானியங்கள் தோற்றத்தில் சிறியதாக இருக்கலாம், ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த மருந்தையும் விட குறைவானது இல்லை. இந்த மசாலாவில் நிறைய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளின் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ