கால்சியம் நிறைந்த இந்த 7 உலர் பழங்கள் எலும்புகளை இரும்பு போல வலிமையாக்குகின்றன, எந்த உலர் பழங்களில் அதிக கால்சியம் உள்ளது என்பதை அறிந்து அவற்றை தினசரி அடிப்படையில் உண்டு வந்தால், 
எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த விஷயத்தில் உலர் பழங்கள் மந்திரம் போல் செயல்படுகின்றன. அவற்றை உட்கொள்வது மிகவும் எளிதானது. சுவையாக சாப்பிட்டுக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலுவான எலும்புகள் 
சிறுவயதிலிருந்தே எலும்புகளை வலுவாக வைத்திருப்பது முக்கியம், எனவே தினமும் பால் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஏனெனில் அதில் கால்சியம் நிறைந்துள்ளது. ஆனால் பாலுடன், நம் உடலின் கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய உதவும் பல உலர் பழங்களும் உள்ளன. எலும்புகளின் நண்பர்களான அந்த உலர் பழங்களின் பட்டியலைத் தெரிந்து கொள்வோம்.
 
பாதம் கொட்டை
உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் பாதாம் கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இது எலும்புகளை பலப்படுத்துகிறது. இதனுடன், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் உள்ளன. 100 கிராம் பாதாம் பருப்பில் 265 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது உங்கள் உணவில் தவறாமல் சேர்க்கப்பட வேண்டும்.   


மேலும் படிக்க | ஊட்டசத்துக்களின் ‘பவர் ஹவுஸ்’ எனப்படும் ஆப்பிளை தினமும் சாப்பிடுங்க..!!
 
எள்
எள் மிகவும் ஆரோக்கியமானது. எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை நாம் அன்றாட உணவில் பயன்படுத்தினாலும், குளிர்காலத்தில் எள் அதிக அளவில் உட்கொள்ளப்படுகின்றன. இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எள்ளை எளிதில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எள்ளு மிட்டாய், எள்ளுருண்டை என வகைவகையாய் எள்ளை சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் எள்ளில் சுமார் 975 மி.கி கால்சியம் உள்ளது.
 
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள், நீரிழிவு, புற்றுநோய், அல்சைமர் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவியாக இருக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இதில் கால்சியமும் ஏராளமாக உள்ளது. 100 கிராம் சூரியகாந்தி விதையில் சுமார் 120 மி.கி கால்சியம் உள்ளது.


பிஸ்தா
பிஸ்தா சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, பல குணங்கள் நிறைந்தது. பிஸ்தாவில் மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உள்ளன, அவை கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் உள்ள பிஸ்தா எலும்புகளை பலப்படுத்துகிறது. 100 கிராம் பிஸ்தாவில் சுமார் 131 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
 
அத்திப்பழம் 


இரத்த சோகையை போக்க அத்திப்பழம் சாப்பிடுவார்கள். அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதைப் போலவே கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த இந்த உலர் பழத்தில் இயற்கையான இனிப்பு உள்ளது. 100 கிராம் அத்திப்பழத்தில் சுமார் 55 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் நல்லது.


மேலும் படிக்க | வெந்தயம் உடம்புக்கு நல்லதுதான்! ஆனா, யாரு எப்போ சாப்பிடக்கூடாது தெரியுமா?


பேரீச்சம்பழம்
குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. இது இயற்கையான இனிப்பு தன்மை கொண்டது. பேரிச்சம்பழம் கால்சியத்தின் நல்ல மூலமாகவும் இருக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடலாம் என்பது சிறப்பு. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் சுமார் 64 மி.கி கால்சியம் உள்ளது.
 
வால்நட்
அக்ரூட் பருப்பு எனப்படும் வால்நட்டை ஊட்டச்சத்துக்களின் முழு தொகுப்பு என்று அழைக்கலாம். இதில் கால்சியம் மட்டுமல்ல, ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஊறவைத்த வால்நட்ஸ் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். 100 கிராம் அக்ரூட் பருப்பில் சுமார் 98 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எடை இழப்பு, நீரிழிவு.... மினி பட்டாணியில் இருக்கும் மெகா ஆரோக்கிய நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ