வெந்தய விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்: வெந்தயம் என்ற பெயரைக் கேட்டவுடனேயே நம் நினைவுக்கு வருவது ஆரோக்கியமான மசாலா என்பது தான். இது இந்திய சமையலறைகளில் உணவை சுவையூட்டவும், ஊறுகாயின் சுவையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.வெந்தய விதைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை ஏற்படுத்தும், ஆனால் சில சூழ்நிலைகளில், வெந்தயம் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.
வெந்தயம், உணவுப்பொருளாக (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
ஆனால், வெந்தயம் நன்மைகளைக் கொடுப்பது போலவே, பல தீமைகளையும் செய்கிறது. அவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | எலும்புகளை வலுவாக்கும் வைட்டமின் எது? ரத்தத்தில் கால்சியம் இருக்கவும் இது அவசியம்!
வெந்தய விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?
வெந்தய விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் உண்டால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதால், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கொலஸ்ட்ரால் நோயாளிகள் அதனை தினசரி உண்கிறார்கள். அதிலும், வெந்தயத்தை முளைக்கட்டி பயன்படுத்தினால், அது கொடுக்கும் பலன்கள் இரட்டிப்பாகும் என்பதால், முளைகட்டிய வெந்தயத்தை அடிக்கடி பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது.
வெந்தயம், ஆரோக்கியத்தை அற்புதமாக மேம்படுத்தும். இதனை உட்கொள்வதால் பல வகையான உடல்நலக் கோளாறுகள் குணமாகும். ஆனால் வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வெந்தய விதைகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினாலோ அல்லது சில சூழ்நிலைகளில் உட்கொண்டாலோ அது தீங்கு விளைவிக்கும். எந்தெந்த சூழ்நிலைகளில் வெந்தய விதைகளை சாப்பிட்டால் ஆரோக்கியம் சீர்கெடும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | உடல் பருமன் பிரச்சனையை தூள் தூளாக்கும் பூசணி விதை தூள்: கண்டிப்பா சாப்பிடுங்க
குறைந்த இரத்த அழுத்தம்
வெந்தயம் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது. ஆனால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை உண்பவர்கள், வெந்தயத்தை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை அதிகமாக உட்கொண்டால், அது உடலில் சோடியம் அளவைக் குறைக்கிறது, இது இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கும் என்பதால், ரத்த அழுத்தம் கிடுகிடுவென குறைந்து ஆரோக்கியம் சீர்கெடும்.
கர்ப்ப காலத்தில் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம்
கர்ப்பிணி பெண்கள் வெந்தயத்தை அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம். வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வது கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிறுநீரில் துர்நாற்றம்
வெந்தயத்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் யூரிக் அமிலம் காரணமாக துர்நாற்றம் ஏற்படலாம். எனவே, நீங்கள் சிறுநீர் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
ஒவ்வாமை பிரச்சினைகள்
வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வது ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு வெந்தயத்தில் உள்ள பண்புகளால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது, இது சருமத்தில் வெடிப்பு, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, சரும பிரச்சனைகள் இருப்பவர்கள், வெந்தயத்தை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்.
இரத்த சர்க்கரை குறைவாக இருந்தால் வெந்தயத்தை சாப்பிட வேண்டாம்
வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். ஆனால் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டால், வெந்தயத்தை சாப்பிட வேண்டாம். இதை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கணிசமாக அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... புரதம் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ