தொப்பையை வேகமாக குறைக்க இந்த 5 உணவுகளை ட்ரை பண்ணுங்க
தொப்பை மற்றும் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் பெரிய பிரச்சனையாகிவிட்டது, வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், நம் உடல் எடை வேகமாக அதிகரித்து வருகிறது.
உடல் பருமன் என்பது தற்போது காலக்கட்டத்தில் அனைவருக்கும் ஒரு பிரச்சனையாகிவிட்டது. அதன்படி ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பொரித்த உணவுகள் போன்றவற்றால் இந்தியாவில் உடல் எடை அதிகரிப்பது சகஜமாகிவிட்டது, இதனால் தொப்பையில் கொழுப்பு அதிகமாக அதிகரிக்கிறது. உடல் எடையைக் குறைப்பது என்ற கவலை எல்லோருக்கும் இருக்கிறது. உங்கள் பிரச்சினைக்கு நாங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளோம். அதன்படி இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் தொப்பையை ஈசியாக குறைக்கலாம்.
தொப்பை கொழுப்பை குறைக்க 5 பெஸ்ட் உணவுகள்
1. பாதாம்: பாதாமில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் 5 முதல் 6 பாதாம் சாப்பிட்டால், உங்கள் பசி தீரும் மற்றும் போதுமான ஆற்றலைப் பெறலாம்.
மேலும் படிக்க | இதயத்தில் ஏற்படும் ரத்தக்கட்டிகள் கண்டுபிடிப்பது எப்படி? இதோ அறிகுறிகள்
2. ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆப்பிளில் 4 முதல் 5 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது, இது நீண்ட நேரம் பசியை உணராமல் தடுக்கும்.
3. இலவங்கப்பட்டை: உங்கள் உணவு அல்லது தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக, இலவங்கப்பட்டையைச் சேர்த்து, குடியுங்கள், இது உங்கள் இன்சுலின் உட்கொள்ளலைக் குறைக்கும் மற்றும் உங்கள் உடல் பருமனும் கட்டுக்குள் வைக்கும்.
4. முட்டையின் வெள்ளைக்கரு: நீங்கள் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டுமே சாப்பிட்டால், நிறைய எடை இழக்கலாம், அதில் புரதம் உள்ளது மற்றும் அதன் நுகர்வு நீண்ட நேரம் பசியை ஏற்படுத்தாது. அதனால் காலை உணவாக முட்டையை நாம் சாப்பிடலாம்.
5. கினோவா: அரிசிக்கு பதிலாக கினோவா சாப்பிடலாம். கினோவா அதிக ஊட்டச்சத்து பண்புகள் உள்ள மிகவும் அறியப்பட்ட ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாகும். இதில் பசையம் இல்லாதது மற்றும் அரிசியை விட அதிக புரத சத்து நிரம்பியுள்ளது. இந்த கினோவா உணவில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது சைவ உணவு விரும்பிகளுக்கு ஆரோக்கிய புரத சத்து கிடைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR