இந்த 9 பொருட்களை சாப்பிட்டு வந்தால் எலும்பு வலி இருக்காது
நீங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க விரும்பினால், சிறு வயதிலிருந்தே அதற்குத் தயாராகுங்கள், ஏனென்றால் எலும்புகள் வலுவாக இல்லாவிட்டால், எதிர்காலத்தில் உங்களால் பெரும்பாலான வேலைகளைச் செய்ய முடியாது.
புதுடெல்லி: வயது ஏற ஏற எலும்பு வலி மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம், ஆனால் தற்போது இளம் வயதிலும் இதுபோன்ற பிரச்சனைகள் வர ஆரம்பித்துவிட்டன. எதிர்காலத்தில் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில், உங்கள் உணவில் சில சிறப்பு விஷயங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், அதன் விளைவு சில நாட்களில் உணரப்படும்.
எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்
உங்கள் தினசரி உணவு, வாழ்க்கை முறை, தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றைப் பொறுத்து உடலின் எலும்புகள் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதை நாம் கணிக்க முடியும். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!
ஊட்டச்சத்து நிபுணரின் கருத்து என்ன?
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பக்தி கபூர், இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், எலும்புகளை வலுவாக்கும் சில உணவுப் பொருட்களைக் தெரிவித்துள்ளார். அவை என்னவென்று விரிவாக காண்போம்.
பக்தி கபூர், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 9 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பட்டியலைத் வழங்கியுள்ளார். அந்த 9 அத்தியாவசிய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
1. பாதாம்
2. பச்சை இலை கீரைகள்
3. கொழுப்பு மீன்
4. தயிர்
5. ஆலிவ் எண்ணெய்
6. வாழைப்பழம்
7. ஆரஞ்சு
8. எள்
9. சோயா
இந்த கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள்
பக்தி கபூர் மேலும் கூறுகையில், 'அதிகமாக மது அருந்துவது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும். தேநீர் மற்றும் காபியில் காணப்படும் காஃபின் கால்சியம் குறைபாட்டைக் குறைக்கிறது, ஊட்டச்சத்து நிபுணர்கள் உடற்பயிற்சிகளையும் வைட்டமின் டி3 உட்கொள்ளலையும் பரிந்துரைக்கின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR