லிமிட்டுக்கு அதிகமா உப்பு சாப்பிட்டா இவ்வளவு ஆபத்து இருக்கா?
Salt Side Effects: உணவில் இருந்து உப்பை நீக்கினால், வாழ்க்கை மந்தமாகத் தோன்றும், ஆனால் அதிக உப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் போது அது உங்களை நோய்வாய்ப்படுத்தும், இதனால் ஒவ்வொரு ஆண்டும் பலர் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.
உங்களுக்கு உணவில் அதிகமாக உப்பு பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது? ஆம் என்றால், அது உங்கள் சுகாதாரத்துக்கு நல்லதல்ல என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். உப்பு என்பது உணவுக்கு சுவை கொடுக்கிறது. மேலும் ன் நாம் உட்கொள்ளும் உணவு நமது உடலில் செரிமானம் ஆகுவதற்கு உப்பு உதவுகிறது. ஆனால் இந்த நன்மையெல்லாம் எப்போது வாய்க்கும் தெரியுமா? உப்பை அளவோடு உட்கொள்ளும் போதுதான். தினமும் நாம் உடம்புக்கு சோடியம் தேவைதான் ஆனால் அதிகமாக உட்கொள்ளும் போது பக்க விளைவுகளை ஏற்படலாம். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் உலகளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகி வருகிறது, பெரும்பாலான மக்கள் பரிந்துரைக்கப்பட்ட தரத்தை விட அதிகமாக சோடியம் உட்கொள்வதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதன்படி 75 சதவிகிதம் உப்பு பதப்படுத்தப்பட்ட உணவின் மூலம் நம் உடலுக்குள் செல்கிறது.
மேலும் படிக்க | வாட்டி வதைக்கும் வறட்டு இருமலை விரட்டும் ‘சில’ பாட்டி வைத்தியங்கள்!
உப்பு நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லலாம்
பல குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், மக்கள் மீன் சாஸ் அல்லது சோயா சாஸ் மூலம் உப்பு உட்கொள்ளல் செய்கிறார்கள். உப்பு உட்கொள்ளலைக் குறைத்துக்கொண்டால், இருதய நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 மில்லியன் இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன. இதனால், சிறுநீரக நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஏன் உப்பு உட்கொள்ள வேண்டும்?
உப்பு நம் உடலுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பதில்லை. சோடியம் மற்றும் பொட்டாசியம் இரண்டும் இதில் காணப்படுகின்றன, இதன் காரணமாக உடலில் உள்ள நீரின் அளவு சரியான அளவில் உள்ளது. அதன் உதவியுடன், ஆக்ஸிஜன் உடலின் அனைத்து பகுதிகளையும் அடைகிறது. இது நரம்பு மண்டலம் மற்றும் வாஸ்குலர் அமைப்பின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
இந்த பொருட்களில் அதிக சோடியம் உள்ளது
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி
- கேண்ட் மீட்
- பீஸ்ஸா
- வ்ஹைட் பிரெட்
- சால்டெட் நட்ஸ்
- கோட்டேஜ் சீஸ்
- சாலட் டிரஸ்சிங்
- ஃபிரெச் ஃபிரைஸ்
- உருளைக்கிழங்கு சிப்ஸ்
- ஹாட் டாக்
- ஊறுகாய்
- சோயா சாஸ்
- மீன் குழம்பு
- தக்காளி சட்னி
- ஃப்ரோஜன் சி ஃபுட்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ