உடல் எடையை குறைக்க உதவும் பிஸ்தா: உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஏனெனில் அவற்றில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமான உணவில் பிஸ்தாவும் சேர்க்கப்பட்டும், அதன் சுவை பலருக்கு பிடிக்கும். இது சுவையான உணவுகள் மற்றும் இனிப்புகளை அலங்கரிக்க பயன்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பிஸ்தா மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இப்போது அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஸ்தாவில் காணப்படும் சத்துக்கள்
ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகையறாக்கள் எப்போதும் உடலுக்கு நன்மை செய்பவை. தினமும் ஒரே வகையான நட்ஸ் வகைகளை சாப்பிடுவதை விட தினம் ஒன்றாக அல்லது தினசரி ஒன்றாக என வகைப்படுத்தி சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துகள் குறையாமல் பாதுகாக்க முடியும். உடல் எடை அதிகரிக்க குறைக்க இரண்டுக்குமே இவை உதவும். அதன் படி பிஸ்தா நீண்ட காலமாகவே உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து கொண்டிருக்கும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகின்றன. இதில் வைட்டமின் இ, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் போன்றவற்றின் சிறந்த ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இதில் தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மெக்னீஷியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | மேல் வயிறு தொப்பை குறையனுமா.. தினமும் காலையில் இந்த பானங்களை குடியுங்கள்


பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


1. எடை குறைக்க உதவும்
பிஸ்தாவில் கலோரிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன, எனவே இது எடையைக் குறைக்க உதவுகிறது, பிஸ்தா சாப்பிடுவது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி இதய நோய் போன்ற தீவிர நோய்களுக்கு மூலகாரணமான கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.


2. கண் ஆரோக்கியம்
பிஸ்தாவில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.


3. நினைவாற்றல் அதிகரிக்கும்
நினைவாற்றல் குறைவாக இருப்பவர்கள் அல்லது ஞாபக மறதி பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க உதவும்.


4. புற்றுநோய் தடுப்பு
பிஸ்தாவில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது நமது செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது, அதனால்தான் இது புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.


5. நீரிழிவு நோய்க்கு நன்மை
நீரிழிவு நோய்க்கு உட்பட்டவர்கள் அதை கட்டுக்குள் வைக்க தவறிவிடும் போது பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு பிரச்சனைகளுக்கு உள்ளாவது உண்டு பெருமளவு உணவு வழியாக நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு அல்லாமல் நீரிழிவினால் உண்டாகும் இதர பாதிப்புகளும் வராமல் தடுக்க உதவக்கூடிய உணவுகள் உண்டு அதில் முக்கியமானது பிஸ்தா பருப்புகள்.


6. ​சரும அழகுக்கும் கூந்தலுக்கும்
பிஸ்தாக்களில் இருக்கும் வைட்டமின் இ சருமத்தின் வயதான தோற்றத்தை தள்ளிபோட செய்கிறது. பிஸ்தா சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருளாக செயல்பட்டு சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களால் சருமத்துக்கு உண்டாகும் சேதத்தை தடுத்து பாதுகாக்கிறது. பிஸ்தாவில் இருக்கும் தாமிரமானது சருமத்தில் தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இயற்கையாகவே நரை முடியை கருப்பாக மாறனுமா? இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ