பாதாம் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?
பாதாம் அதிகம் சாப்பிட்டால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், அதை அதிகமாக உட்கொண்டால், அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். மேலும், பாதாம் எப்படி ஆரோக்கியத்திற்கு பாதிப்பை விளைவிக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எடை அதிகரிக்கும்
28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளன. தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது, அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள். அதற்கு மேலாக நீங்கள் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பை தவிர்க்க முடியாது. உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Weight Loss: உடல் எடையை குறைக்க ட்ரை ஃப்ரூட் டயட்
மலச்சிக்கல்
பாதாமில் நார்ச்சத்து அதிகம். பாதாமில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேநேரத்தில் அதிகப்படியான நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே பாதாம் பருப்பை அதிகம் சாப்பிட்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும், இதனால் வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் தசை பிடிப்புகள் கூட ஏற்படலாம்.
சிறுநீரக கல் ஆபத்து
பாதாமில் குடலில் கரையக்கூடிய ஆக்சலேட் அதிகம் உள்ளது. உடலில் அதிக அளவு ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே பாதாமை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
ஒவ்வாமை பிரச்சினைகள்
சிலர் பாதாம் அல்லது முந்திரி சாப்பிடுவதால் ஒவ்வாமை இருப்பதாக புகார் கூறுகின்றனர். உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் பாதாம் சாப்பிடுவதை தவிர்க்கவும். பாதாம் பருப்பு சிலருக்கு வாய் அலர்ஜி சிண்ட்ரோம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தொண்டை புண் மற்றும் உதடுகளின் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுபவர்கள் இதனையெல்லாம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR