கொழுத்த தொப்பையை கடகடவென வீட்டிலிருந்தே குறைக்கலாம்! ஈசியான 5 வழிகள்..
Exercises To Reduce Belly Fat : உடல் எடையை வீட்டிலிருந்தே குறைக்க விரும்புபவர்கள், இந்த ஈசியான 5 வழிகளை பின்பற்றலாம்.
Exercises To Reduce Belly Fat : குழந்தைகள், பெரியவர்கள், இளம் வயதினர் என பாரபட்சம் இன்றி பலர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். போதாக்குறைக்கு, இணையதளத்தில் ஒரு சிலர் ‘பாடி பாசிடிவிட்டி’ எனும் பெயரில் ஆரோக்கியமற்ற நிலையில் உடல் எடை அதிகரித்திருப்பதை வைத்து பிரபலமாகி வருகின்றனர். உடல் பருமனுடன் இருப்பதில் எந்த அழகும் குறைந்து விடப்போவதில்லை என்றாலும், ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே ஆயுள் முழுவதும் சிரமமின்றி வாழ முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒரு சிலர், சிறுவயதில் இருந்தே உடல் பருமனுடன் வளர்ந்து, பின்னர் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்வர். ஆனால், அதன் பிறகு அவர்களால் எடையை குறைக்க முடியாமல் பாேகலாம். அப்படி உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? இதாே ஈசி டிப்ஸ்!
ப்ளாங்க்ஸ்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், குறிப்பாக தொப்பையில் இருக்கும் சதையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய உடற்பயிற்சி இது. இதன் பெயர் Planks. இதை செய்கையில் தொப்பை குறைவதோடு மட்டுமன்றி, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் இருக்கும் அதிக தசைகளும் கூட குறையும்.
எப்படி செய்ய வேண்டும்?
கை முட்டிகளாலும், கணுக்கால்களாலும் உங்கள் உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும். முதலில் குப்புற படுத்துக்கொண்டு பின்னர் கை முட்டிகலாம் எழுந்து 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை ஹோல்ட் செய்யலாம்.
பைசைக்கிள் க்ரஞ்சஸ்:
உங்கள் கொழு கொழு தொப்பையை இளைக்க வைக்கும் ஈசியான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்று. பல்வேறு உடற்பயிற்சிகள், உங்களது தொப்பையை குறைக்க உதவினாலும் குறிப்பாக இந்த உடற்பயிற்சி உங்களின் வயிறை மிகவும் ஒல்லியாக்கும். இதை செய்கையில் நமது தோள்பட்டை, கழுத்து பகுதி மற்றும் தொடை தசைகள் ஆகியவற்றிற்கு வேலை கொடுக்க வேண்டும்.
எப்படி செய்வது?
தரையில் நேராக படுத்து, தலையின் இரு பக்கங்களிலும் கைகளை வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், இடது கால் முட்டியை உங்கள் மார்புக்கு நேராக கொண்டு வரும் போது. அப்படி செய்கையில், உங்கள் வலது காலின் கை முட்டியை, இடது காலின் கால் முட்டிக்கு நேராக கொண்டு வரவும். இப்படி இரண்டு பக்கமும் மாறிமாறி செய்ய வேண்டும்.
மவுண்டெய்ண்ட் க்ளைம்பர்ஸ்:
இதய நோய் அபாயத்தை தடுத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளுள் ஒன்று மவுண்டெய்ன் க்ளைம்பர்ஸ். இது, இடுப்பின் இரு பக்கங்களில் இருக்கும் love handles என சொல்லப்படும் அதிக தசைகளையும் குறைக்க உதவுகிறது. இதை செய்வதால், மார்பகம் மற்றும் கைகளுக்கு நல்ல பயிற்சி கொடுக்கலாம்.
மேலும் படிக்க | அடி வயிறு தொப்பை குறைக்க தினமும் இந்த பானங்களை குடியுங்கள்
ரஷ்ஷியன் ட்விஸ்ட்ஸ்:
உடலை பாலன்ஸாக வைத்துக்கொள்ள மற்றும் சமநிலை படுத்துவதற்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சி ரஷ்ஷியன் ட்விஸ்ட்ஸ் உடற்பயிற்சிகளாகும். இது, நம் உடல் தசைகளை வலிமைப்படுத்தவும் உதவுமாம். தரையில் அமர்ந்து கொண்டு இந்த உடற்பயிற்சிகளை செய்யும் போது உடலின் மையப்பகுதி துரிதமாக செயல்படுவதாகவும் இதனால் தொப்பை வேகமாக குறையும் என கூறப்படுகிறது.
லெக் ரைசஸ்:
கால்களை தூக்கி செய்யும் உடற்பயிற்சி இது. இது, நம் கீழ் வயிற்றையும் அங்கிருக்கும் தசைகளையும் வலிமைப்படுத்த செய்யப்படும் உடற்பயிற்சியாகும். தரையில் படுத்துக்க்கொண்டு, கால்களை மட்டும் எதன் துணையும் இன்றி தூக்கி நிறுத்தி மீண்டும் முட்டியை மடக்காமல் கீழ் இறக்க வேண்டும். ஆனால் கீழே இறக்கும் போது, கால்கள் தரையில் படக்கூடாது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பை குறைய காலையில் இந்த 2 விஷயங்களை செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ