Weight Loss Tips: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உடல் பருமனால் ஒருவருடைய ஆளுமை குறைவதோடு பல வித உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. உடலில் சேரும் கொழுப்பு வயதுக்கு ஏற்ப பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சனை இருந்தால், உடனடியாக அதை சரி செய்வது அவசியம்.
பலர் உடல் எடையை குறைக்க ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் உதவியுடன் தங்கள் எடையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். எனினும் சிலருக்குதான் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. உணவுகளில் மாற்றம் மற்றும் முறையான உடற்பெயர்ச்சி ஆகியவற்றின் மூலம் சீராக உடல் எடையை குறைக்கலாம். இது தவிர சில பானங்களை தினமும் உட்கொள்வதன் மூலமும் கலோரிகள் விரைவாக எரிக்கப்படுகின்றன. இவை கொழுப்பை கரைத்து எடையை குறைக்க (Weight Loss) ஆரோக்கியமான வழிகளில் உதவுகின்றன. இந்த பானங்களில் ஒன்றுதான் கிரீன் டீ.
கிரீன் டீயின் நன்மைகள் (Benefits of Green Tea)
கிரீன் டீயில் (Green Tea) அதிக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆண்டிஆக்சிடெண்டுகள், காஃபின், அமினோ அமிலங்கள் ஆகியவை கிரீன் டீயில் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் திடத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனை உட்கொள்வதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி இது சர்க்கரையையும் கட்டுப்படுத்துகிறது. கிரீன் டீயில் உள்ள பண்புகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
உடல் எடையை விரைவில் குறைக்கும் கிரீன் டீ (Green Tea For Weight Loss)
ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்த கிரீன் டீயை உட்கொள்வதால், உடல் பருமனை விரைவாகக் குறைக்கலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதை தொடர்ந்து குடித்து வந்தால், அது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்கும். கிரீன் டீயில் உள்ள கலவைகள் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை செயல்படுத்துகின்றன. இதனால் உடலில் தொப்பை கொழுப்பு (Belly Fat) உட்பட பிற இடங்களில் சேர்ந்திருக்கும் கோழுப்பு குறைவதிலும் பெரிய உதவி கிடைக்கின்றது.
மேலும் படிக்க | கொளுத்தும் சம்மரில் சுகர் லெவலை குறைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்
கிரீன் டீயை எப்போது உட்கொள்ள வேண்டும்
- பெரும்பாலும் மக்கள் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீயை உட்கொள்கிறார்கள். ஆனால், அப்படி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் வெறும் வயிற்றில் க்ரீன் டீயை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதனால் அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
- காலையில் கிரீன் டீ குடிப்பது நல்லது, ஆனால் ஏதாவது உட்கொண்ட பிறகுதான் அதை குடிக்க வேண்டும்.
- உணவு உட்கொள்ளும் போது க்ரீன் டீ உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
- இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கிரீன் டீ குடிக்கலாம்.
- அதிக அளவில் கிரீன் டீ குடிப்பதும் நல்லதல்ல. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே கிரீன் டீ குடிக்கவும்.
சரியான முறையில் இப்படி தினமும் கிரீன் டீ குடித்தால், விரைவாக, ஆரோக்கியமான வழியில் கலோரிகளை எரித்து, உடல் எடையையும் குறைக்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ