கோடையில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த 6 அற்புத வழிகள்
கோடைகாலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது தட்பவெப்பம் 35ºC+ அளவுக்குக் இருக்கிறது. சூடு இப்போதே அதிகரித்துவிட்டநிலையில் , வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காலம் இது.
புதுடெல்லி: கோடைகாலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது தட்பவெப்பம் 35ºC+ அளவுக்குக் இருக்கிறது. சூடு இப்போதே அதிகரித்துவிட்டநிலையில் , வெப்ப பக்கவாதம் மற்றும் நீரிழப்பு என பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காலம் இது.
இந்த கோடையில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த 6 வழிகள்! அவை அனைத்தும் மிகவும் சுலபமானவை, கடைபிடிக்க எளிதானவை தான்.
தண்ணீர்
எப்பொழுதும் ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு செல்லுங்கள். தண்ணீரை அவ்வப்போது குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்
தேவைப்பட்டால் அலாரம் வைத்து, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு கிளாஸ் தண்ணீரை பருகவும். உடலின் நீர்ச்சத்தை பராமரிப்பது வெப்பத்தை எளிதாக வெல்ல உதவுகிறது.
பழச்சாறுகள், சூப்கள், இளநீர் மற்றும் முலாம்பழம் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் ஆகியவற்றை சாப்பிடவும். உடலில் நீர்ச்சத்தை பரமாரிக்க பல வழிகள் இருந்தாலும் அவற்றை கடைபிடிப்பதே முக்கியமான ஒன்று.
நடைபயிற்சி
நாள் முழுவதும் சும்மா உட்கார்ந்திருப்பது விருப்பமானனதாக இருக்கலாம், ஆனால் வயதானவர்களாக இருந்தாலும் தினசரி ஒரு குறிப்பிட்ட தூரம் நடப்பது இருதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
நடனம், யோகா, விளையாட்டு என எதுவாக இருந்தாலும் சரி, உடல் இயக்கம் என்பதே முக்கியமானது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை செய்பவர்களாக இருந்தால், உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பதையும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறையாவது எழுந்து நிற்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | உடலின் தோஷங்களை அதிகரிக்கும் உணவுகள்
ஊட்டச்சத்தை அதிகரிக்கவும்
கோடையில் நாம் சாப்பிடும் உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவு உணவு, கொலஸ்டால் அதிகமுள்ள உணவு உண்டால், சோம்பல் ஏற்படும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும்.
3 வேளையாக அதிக அளவில் சாப்பிடுவதற்கு பதிலாக 4-5 முறையாக ஆனால் உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள். சர்க்கரை உட்கொள்ளலையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
கோடைகால பழங்கள், பெர்ரி மற்றும் காய்கறிகளை, குறிப்பாக அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடவும்.
மேலும் படிக்க | எந்த பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?
மன ஆரோக்கியம்
மனமும் உடலும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதால், உடல் நலனைப் போலவே மனநலத்திற்கும் முன்னுரிமை அளிப்பது முக்கியம். உடல் ரீதியாக வெப்பம் மனரீதியாக சோர்வை ஏற்படுத்தும்,
எந்தவொரு விஷயத்தையும் தொடர்ந்து செய்யாமல் இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள், மன அழுத்தத்தைத் தணிக்கவும், முடிந்தவரை எதிர்மறை விஷயங்களில் இருந்து விலகி இருக்க முயற்சிக்கவும்.
ஆழ்ந்த உறக்கம்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முழு இரவு தூக்கத்தை விட முக்கியமானது எதுவுமில்லை. கோடைக்காலத்தில் உறக்கமும் குறையும்.
முறையான தூக்க பழக்கத்தைப் பின்பற்றுங்கள. இது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல, எப்போதுமே உங்களுக்கு உதவும்!
உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள், மன அழுத்தம் மற்றும் சோர்வு அறிகுறிகளைக் கவனியுங்கள், உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கொடுங்கள்.
விருப்பத்தை மதியுங்கள்
நாம் அனைவரும் மனிதர்கள், சாப்பிடுவதற்காக வாழ்கிறோம், எனவே கோடையில் உங்களுக்கு ப்பிடித்த அனைத்து அற்புதமான, சுவையான உணவுகளையும் சாப்ப்பிடுங்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் கட்டுப்பாடு ஒன்று மட்டுமே முக்கியமானது.
மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR