ஆர்வ கோளறுல வெந்நீர் அதிகம் குடிக்காதீங்க... கிட்னி காலியாகிவிடும்...!
சிலர், உடல் எடையை குறைக்கவும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கவும் காலையில் வெந்நீர் குடிப்பார்கள். ஆனால் அளவிற்கு அதிகமான வெந்நீரைக் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. இதனால் உடலில் உள்ள பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்யவும் இது உதவுகிறது. இதனால், உடல் எடை குறைகிறது. மேலும், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை ஏற்படும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாக எதையும் அருந்துவது, பாதிப்பையே உண்டு செய்யும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
அளவிற்கு அதிகமான வெந்நீர் ஏற்படுத்தும் பாதிப்புகள்!
வெந்நீரை அதிகம் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்
சிறுநீரகம் ஒரு சிறப்பு தந்துகி அமைப்பைக் கொண்டுள்ளது, இது உடலில் இருந்து கூடுதல் நீரை அகற்ற உதவுகிறது. வெந்நீரைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் என்றாலும். அது அளவோடு இருக்க வேண்டும். அதிக அளவு சூடான நீரை குடிப்பதன் காரணமாக சிறுநீரகம் செய்யும் வேலை மிகவும் அதிகரிப்பதால், அதன் செயல்பாட்டை அது பாதிக்கும். கிட்னி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் சில காலம் கழித்து சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அதிக வெந்நீர் குடிப்பதால் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும்
தாகம் இல்லாமல் வெந்நீரை அதிகம் குடித்தால், அது உங்கள் மூளைத் திறனை பாதிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்நீரை வேண்டும் என விரும்பினாலோ அல்லது தொண்டையில் பிரச்சனை இருந்தாலோ மட்டும் குடிக்கவும். வயிற்று வலி இருந்தாலும் வெந்நீர் அருந்தலாம். அதிகப்படியான சூடான நீரைக் குடிப்பதால் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம், மேலும் இது மூளை தொடர்பான பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். இதனால் தலை வலியும் ஏற்படலாம்.
மேலும் படிக்க | உடல் பருமன் குறையலையா... ‘இந்த’ நெகடிவ் கலோரி உணவுகளே போதும்!
தூக்கமின்மை பிரச்சனை
இரவில் தூங்கும் முன் வெந்நீரை உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் இரவில் சரியாக தூக்கம் வராது. இரவில் வெந்நீர் குடிப்பதால் சிறுநீர் பெருகும் என்று கூறப்படுகிறது. இது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம். எனவே வெந்நீரை அளவோடும் உண்டு உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதிக வெந்நீரைக் குடிப்பதால் எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப் போகும்
உங்கள் உடல் அதிகப்படியான தண்ணீரை இழந்தால், இரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் செல்களை விட நீர்த்தப்படும். இரத்தத்திற்கும் உயிரணுக்களுக்கும் இடையில் சமநிலையை பராமரிக்க இரத்தத்தில் இருந்து நீர் செல்களுக்குள் இழுக்கப்படும். இது செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது மூளையில் மண்டை ஓட்டை அழுத்தி, தலைவலி மற்றும் பிற பிரச்சனைகளைத் தூண்டும்.
அதிக வெந்நீர் குடிப்பதால் புண் ஏற்படும் ஆபத்து
சில நேரங்களில் அதிக சூடான நீரை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதிக வெந்நீரைக் குடிப்பதால், உதடுகள் மற்றும் வாயின் உட்புறப் பகுதி எரிந்து, சிறு தீக்காயங்கள் ஏற்படும். வெதுவெதுப்பான நீரைக் குடிக்க முயற்சிக்கவும். குடிப்பதற்கு முன், தண்ணீரை உங்கள் விரல்களால் தொட்டு எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை சரிபார்க்கவும். வெந்நீரைக் குடிப்பதால் வாய் புண்கள் ஏற்பட்டால், அது உணவுக்குழாய் மற்றும் செரிமான மண்டலத்தையும் சேதப்படுத்தும். சூடான நீரின் வெப்பநிலை உடல் வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதால், இது உங்கள் உள் உறுப்புகளில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.
(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ