சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும்.  ரத்த சோகை, உடல் பருமன், தூக்கப் பிரச்சினைகள், பதற்றம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு ஆரோக்கிய உணவாகும். கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது ரத்தில் உள்ள சர்க்கரை சிறப்பாக கட்டுபடுத்தும். அதாவது, குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ்  (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. ஆரோக்கியமாக இருக்க, பெரும்பாலானோர் சாதாரண கோதுமை மாவுக்குப் பதிலாக பார்லி மாவு, தினை மாவு அல்லது ராகி மாவையே பயன்படுத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுகுடலில் சேதம்


கேழ்வரகை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால், சிறுகுடலில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வீக்கம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உடல நல பிரச்சனைகள் ஏற்படலாம்.


 சிறுநீரக பிரச்சனை


கேழ்வரகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் நமது உடலில் ஆக்சாலிக் அமில தன்மை அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு கேழ்வரகு உணவு ஏற்றதல்ல. எனவே, சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால் ராகியை உட்கொள்ள வேண்டாம். 


தைராய்டு பிரச்சனை


கேழ்வரகு  சாப்பிடுவது தைராய்டு நோயாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டு வகையான தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுமே கேழ்வரகு உணவை தவிர்ப்பது நல்லது. ராகியை அதிக அளவில் எடுத்துக் கொள்வது தைராய்டு நோயாளிகளின் பிரச்சனையை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | குங்குமப்பூ பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம், கட்டாயம் ட்ரை பண்ணுங்க


அஜீரண  பிரச்சனை


மேலும் ராகியை குளிர் காலங்களில் அதிக  அளவில் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ராகி  குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய உணவு என்பதால், இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிக அளவிலான கேழ்வரகு பசியின்மை, வீக்கம், அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. 


மலச்சிக்கல் பிரச்சனை


ராகியில் காணப்படும் பல தனிமங்கள் காரணமாக, இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் வயிற்றுப்போக்கு மற்றும் வாயுவை ஏற்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையில் கூட ராகி சாப்பிடக்கூடாது. இது எளிதில் ஜீரணமாகாது, இதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பெருங்காயம்: இதை இப்படி பயன்படுத்தினால், 3 பிரச்சனைகள் ஆகும் மாயம், விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ