உயர் இரத்த அழுத்தம், உலகளவில் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான மருத்துவ நிலையாகும். உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் "சைலண்ட் கில்லர்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது பெரும்பாலும் அறிகுறிகளை காட்டுவதில்லை. இன்றைய வாழ்க்கை முறை காரணமாக உயர் இரத்த அழுத்தம் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பொதுவாக இரத்தத்தில் அதிகளவு திரவம் இருந்தால், இரத்தக் குழாய்கள் சுருங்கியோ விறைப்பாகவோ இருந்தால் அல்லது அதில் அடைப்பு இருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், அது மெதுவாக உடலில் சிறுநீரக பாதிப்பு, டிமென்ஷியா மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்த அழுத்தம் அதிகபட்சமாக 140/90 mmHg வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்த அழுத்தம் இதை விட அதிகமாக இருந்தால், ஒரு நபருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள வலி நிவாரணி மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வது உள்ளிட்ட சில விஷயங்கள் காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


வலி நிவாரணி மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வது


தலைவலி கால் வலி என எது வந்தாகுலும் வலி நிவாரணிகளை (Pain Killer) சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. வலி நிவாரணிகளை மருந்தை எப்போதாவது சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் நீங்கள் அதை வழக்கமாக்கினால், அது உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே வலி நிவாரணிகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.


பதப்படுத்தப்பட்ட உணவு


அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நேரமின்மை காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்து கிடைக்கும் பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ள ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. இந்த வகை உணவுகளில் அதிக அளவு உப்பு அதாவது சோடியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தத்தில் அதிக அளவு உப்பு இருந்தால், அது உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சத் தொடங்குகிறது. இது இரத்த நாளங்களை பாதிக்கிறது. எனவே, முடிந்தவரை சுத்தமான வீட்டில் சமைத்த உணவையே உட்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | அழகாக வயதாக வேண்டுமா? வயதானாலும் நிம்மதியாக வாழ, உங்கள் வீட்டில் இதெல்லாம் இருக்கா?


தூக்கமின்மை


உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இதயத் தடுப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தூக்கமின்மை பிரச்சனையை அலட்சியப்படுத்தாதீர்கள்.


உடலில் வைட்டமின் டி குறைபாடு


உடலில் வைட்டமின் டி இல்லாததால் எலும்புகள் வலுவிழந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், வைட்டமின் டி குறைபாடு உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே, உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்கவும், இன்றிலிருந்தே வைட்டமின் டி நிறைந்த உணவை உட்கொள்ளத் தொடங்குங்கள்.


மேலும் படிக்க | சிக்கென்ற உடல்வாகு வேண்டுமா? நோய்கள் இல்லா வாழ்வுக்கு ஆளி விதையை இப்படி சாப்பிடுங்க


மன அழுத்தம்


மன அழுத்தம் உங்களுக்கு இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்திலிருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதிக மன அழுத்தம் உங்கள் இரத்த நாளங்களையும் சேதப்படுத்தும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, சமூக நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். தனிமையில் இருப்பதால், ஒரு நபர் மன அழுத்தத்திற்கு ஆளாகி, படிப்படியாக விரக்தியில் மூழ்கி விடுகிறார்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.


மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ