விரை வீக்கத்தை குணப்படுத்தும் கரிசலாங்கண்ணி கீரை..! இதோ
விரை வீக்கம் முதல் கொனேரியா வரையிலான பாதிப்புகளுக்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஞாபக மறதி
அன்றாடம் சிறிது பாதாம் பருப்புடன் சம அளவு தேங்காயைச் சேர்த்து உண்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். ஞாபக சக்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்துக்கள் தேங்காயிலும், பாதாம் பருப்பிலும் நிரம்ப உள்ளன.
உதட்டு வெண்மை
அன்றாடம் அதிகாலை வேளையில் பல் துலக்கியதும் கருந்துளசியைப் பறித்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து 48 நாட்கள் உண்ண வேண்டும். இந்தக் கருந்துளசி உண்ணும் காலத்தில் கடுகு, எண்ணை போன்றவற்றை நீக்கி பத்திய உணவு உண்டுவர வேண்டும். அவ்வாறு பத்தியமாக இருந்து மருந்து உண்டால் படிப்படியாக உதட்டில் காணப்படும் வெண்மை நிறம் மறைந்துவிடும்.
மேலும் படிக்க | Green Tea குடிக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க
கொனேரியா
வெள்ளரி இலையின் சாறுடன் இளநீரைக் கலந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டு அவுன்ஸ் வீதம் 8 நாட்கள் அருந்தி வந்தால் கொளேரியா எனும் பால்வினை நோய் அகலும்.
நரம்புத் தளர்ச்சி
750 கிராம் ஓரிலைத் தாமரை, 750 கிராம் தேன், 250 கிராம் சிறிய வெங்காயம், 250 கிராம் கசகசா ஆகிய இந்த நான்கு பொருட்களையும் மண்சட்டியிலிட்டு அதில் 100 மில்லி பசும்பாலை ஊற்றி வைக்க வேண்டும். பின்பு இந்தச் சட்டியை அடுப்பின் மீது வைத்து லேசான தீயால் எரிக்க வேண்டும். பதமான பிள் இறக்கி வைத்து ஆறினவுடன் கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். காலையும், மாலையும் இருவேளை உணவிற்கு முன்னர் மூன்று தேக்கரண்டி அளவு வீதம் இந்த லேகியத்தை எடுத்து உண்ண வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து அருந்திவர நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் நன்கு பலப்படும்.
விரை வீக்கம்
நன்றாக முற்றிய தேங்காய்த் துருவல்களை விளக்கெண்ணையில் வதக்கி விரை வீக்கமுள்ள இடத்தில் வைத்து கட்டிவர விரை வீக்கம் அகலும்.
ஆண்மைக்குறைவு
தினந்தோறும் உணவுடன் மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை நெய்யில் கவந்து உண்டுவர வேண்டும். இரவில் பசும்பாலுணவு அருந்திவர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்தால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு அகலும்.
(இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தகவல்கள் அடிப்படையிலானவை. உங்களின் தனிப்பட்ட பாதிப்புகளுக்கு மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். தகவல்களை ஜீ நியூஸ் உறுதிபடுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ