Green Tea குடிக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க

Mistakes While Having Green Tea: விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினாலோ, சருமத்தை பளபளப்பாக மாற்ற விரும்பினாலோ, செரிமானத்தை மேம்படுத்த வேண்டி இருந்தாலோ, உடலில் ஆற்றல் தேவை என்றாலோ நமக்கு உடனே நினைவுக்கு வருவது கிரீன் டீ!!

கிரீன் டீயில் பல நன்மைகள் உள்ளன. தற்போது உலகளவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. கிரீன் டீ நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன், புற்றுநோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஆகியவற்றிலும் இது நன்மை பயக்கும்.

1 /6

சிலர் க்ரீன் டீயை சரியான முறையில் உட்கொள்ளத் தெரியாமல், அதைக் குடிக்கும்போது சில தவறுகளைச் செய்கிறார்கள். அதைக் குடிக்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதனால் பயன் பெறுவதற்கு பதிலாக பாதகமான விளைவுகள் ஏற்படும். 

2 /6

அளவு: கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. ஆனால் சிலர் அதை அதிகமாக உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால், அது கவலை, தூக்கமின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

3 /6

நேரம்: க்ரீன் டீயில் காஃபின் உள்ளது. நீங்கள் அதை இரவில் உட்கொண்டால், அது தூங்கும் முறையை மோசமாக பாதிக்கும். அதனால் இரவில் க்ரீன் டீ சாப்பிடுவதை தவிர்க்கவும். தூங்கும் முன் அதை ஒருபோதும் உட்கொள்ள வேண்டாம்.

4 /6

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்: சிலர் காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கிரீன் டீயில் டானின் உள்ளது, இது வயிற்றில் அமிலத்தை உருவாக்குகிறது. ஆகையால் இதை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. 

5 /6

சாப்பிட்ட உடன் குடிக்கக் கூடாது: சாப்பிட்ட உடனேயே க்ரீன் டீ குடிப்பதால் உணவில் உள்ள சத்துக்களை உடல் பெறுவதில் தடை ஏற்படுகிறது. சாப்பிட்ட உடனேயே அதை உட்கொண்டால்  இரும்புச்சத்து உடலுக்கு போவதில் பாதிப்பு வரும். இதன் காரணமாக இரத்த சோகை ஏற்படலாம். சாப்பிட்ட 1-2 மணி நேரம் கழித்து நீங்கள் க்ரீன் டீயை குடிக்கலாம்.

6 /6

ரீ யூஸ் செய்ய வேண்டாம்: சிலர் கிரீன் டீ பைகளை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இப்படி செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் டீ பேக்குகளை மீண்டும் உபயோகிப்பது தேநீரின் சுவையை கெடுத்துவிடும், மேலும் இது ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.