அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ.. அறிகுறிகள் என்ன?.. எதை செய்யக் கூடாது?
கண் வெண்படல அழற்சி அல்லது மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.
மெட்ராஸ் ஐ: மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ எனும் கண் தொற்று வேகமாக பரவி வருகிறது. டெல்லி-என்சிஆரிலும் அதன் எண்ணிக்கைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கான்ஜுன்க்டிவிடிஸ் (Conjunctivitis) என்பது கண்களின் ஒரு நோயாகும், இது கான்ஜுன்க்டிவிடிஸ், பிங்க் ஐ என்றும் அழைக்கப்படுகிறது. "மெட்ராஸ் ஐ" என்று பிரபலமாக அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி டெல்லியில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது, அதுவும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.
சமீப வாரங்களில் சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளிகளுள் பெரும்பாலோருக்கு கண் வெண்படல அழற்சி (மெட்ராஸ் ஐ) இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது டெல்லியின் பெரும்பாலான பகுதிகள் யமுனை நதி நீரில் மூழ்கியது. இதனால் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் யமுனை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இந்த நோய் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 10 நாளில் தொப்பையை குறைக்க இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்
மெட்ராஸ் ஐயின் அறிகுறிகள் என்ன (Eye Flu Symptoms)
கண்களில் ஏற்படும் தொற்று கண் காய்ச்சல் அல்லது கான்ஜுன்க்டிவிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில், தொற்று உள்ளவரின் கண்கள் சிவப்பாக மாறும். இதனுடன், கண்களில் இருந்து நீர் வெளியேறி, வீக்கம் ஏற்படக்கூடும். இதனால் கண்கள் தெளிவாக பார்க்க முடியாமல் போகும்.
இந்த தொற்று எப்படி பரவுகிறது (Eye Infection)
Eye Flu என கூறப்படும் மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது. மேலும் இது தானாகவே பத்து நாள்களுக்குள் சரியாகிவிடும். இருப்பினும் அந்த வலியைப் போக்கவும், அது அதிகமாகாமல் தடுக்கவும், கண் சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அப்படி அந்த வைரஸ் தாக்கினால் அவர்களின் கருவிழிகளைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
மெட்ராஸ் ஐயைத் தவிர்ப்பதற்கான வழிகள்
(Prevention and Eye Care tips)
* உங்கள் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்.
* கண்களைத் தொடுவதை தவிர்க்கவும்.
* உங்களைச் சுற்றிலும் தூய்மையைப் பேணுங்கள்.
* அவ்வப்போது கண்களைக் கழுவவும்.
* வெளியே செல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தால், கூலிங் கிலாஸ் அணிந்து செல்லுங்கள்.
* பாதிக்கப்பட்டவருடன் கண் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
* பாதிக்கப்பட்ட நபரின் படுக்கை, துண்டு அல்லது துணிகளைப் பயன்படுத்த வேண்டாம்
* டிவி-மொபைலிலிருந்து தூரத்தை வைத்திருங்கள்.
பல்வேறு வகையான மெட்ராஸ் ஐ / கண் காய்ச்சல்
* பாக்டீரியா கான்ஜுன்க்டிவிடிஸ்
* வைரல் கான்ஜுன்க்டிவிடிஸ்
* கோனோகோகல் மற்றும் கிளமிடியல் கான்ஜுன்க்டிவிடிஸ்
* ஒவ்வாமை கான்ஜுன்க்டிவிடிஸ்
* ஜெயண்ட் பாப்பில்லரி கான்ஜுன்க்டிவிடிஸ்
* தொற்று அல்லாத கான்ஜுன்க்டிவிடிஸ்
மெட்ராஸ் ஐ அறிகுறிகள்
* கண் சிவப்பாதல்
* கண் உறுத்தல் , எரிச்சல்
* கண் பூழை கட்டுதல்
* கண்ணில் தண்ணீர் வடிதல்
* வெளிச்சத்தை பார்க்க சிரமம்
மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ