உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைப்பதற்கு முயற்சி செய்யும் பலர், முகத்தில் படிந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு முயற்சிப்பதில்லை. கன்னம் மற்றும் தாடைக்கு அருகில் கொழுப்பு அதிகமாக சேரும்போது ‘இரட்டை கன்னம்’ பிரச்சினை உண்டாகும். தாடையின் அடியில் மற்றொரு அடுக்கு தோன்றி முகதோற்றத்தையே மாற்றியமைத்துவிடும். முகத்தில் உள்ள கொழுப்பு மற்றும் இரட்டை கன்னம் ஆகியவற்றை நீக்க, ஃபேஷியல் யோகா சிறந்த தீர்வாக இருக்கும். தொப்பையை பெல்ட் அணிந்து சிறிது மறைத்து விடலாம், ஆனால்,  உங்கள் முகத்தில் இரட்டை கன்னத்தை மறைக்க முடியாது. இந்நிலையில், சில முக யோகாக்கள் கொழுப்பை நீக்கி உங்கள் அழகை மீட்டெடுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேஷியல் யோகா (Facial Yoga)


சிங்க போஸ் (Lion Pose):


இந்த ஆசனத்தில், உங்கள் நாக்கை முழு பலத்துடன் வெளியே நீட்டி, உங்கள் வாயில் காற்றை நிரப்பி, உங்கள் நாக்கை வலது மற்றும் இடது பக்கம் அசைக்கவும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் முகத்தின் தோல் இறுக்கமடையும், முகத்தில் உள்ள கூடுதல் கொழுப்பு குறையும். முகத்தில் உள்ள தொங்கும் சதைகளும் இறுக்கமடையும்.


பலூன் போஸ் (Ballon Pose):


உங்கள் அன்றாட வாழ்க்கையில் துவைக்க இது போன்ற போஸ்களை நீங்கள் செய்திருக்க கூடும். இதைச் செய்ய, உங்கள் வாயில் முடிந்தவரை காற்றை நிரப்பவும். அசைத்து கொப்புளிப்பது போல் செய்யவும் இப்படி தினமும் 5 முதல் 7 முறை செய்து வந்தால், இரட்டை கன்னம் நீங்குவது மட்டுமின்றி, தாடை எலும்புகளும் வலுவடையும்.


மேலும் படிக்க | மருக்களை அடியோடு நீக்கும் ‘பூண்டு - வெங்காயம்’ அடங்கிய மேஜிக் பேஸ்ட் !


மீன் போஸ்  (Fish Pose):


இந்த வகையான யோகாவில், நீங்கள் உங்கள் கன்னங்களை உள்நோக்கி இழுத்து மீன் போன்ற வடிவத்தை உருவாக்குகிறீர்கள். குழந்தை பருவத்தில், பலர் இதனை செய்திருப்பார்கள். அது இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய யோகா முகத்தில் உள்ள கூடுதல் கொழுப்பை நீக்குவது மட்டுமின்றி, தசைகளை இறுக்கமாக்கி, சுருக்கங்களையும் நீக்கலாம்.


முக யோகா செய்ய இன்னும் பல வழிகள் உள்ளன. இவை அனைத்தின் நோக்கமும் முகத்திற்கான பயிற்சி. இதன் காரணமாக, முக இயக்கங்கள் அதிகரித்து, படிப்படியாக நீங்கள் விரும்பிய பலனைப் பெறத் தொடங்குவீர்கள். 


மேலும் படிக்க | முகத்தில் தொங்கும் சதைகள் அழகை கெடுக்கிறதா... இறுக்கமாக்க சில எளிய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ